8 மாத இடைவெளிக்கு பின்னர் வீசிய முதல் பந்திலேயே அற்புதம் நிகழ்த்திய பென் ஸ்டோக்ஸ் – அதிர்ந்து போன ரோஹித் சர்மா

Stokes
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்த அந்த அணி அடுத்தடுத்த மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து இந்திய அணியிடம் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரை இழந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ம் தேதி தரம்சாலா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 218 ரன்களுக்கு சுருண்டது. அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது 350 ரன்களை கடந்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது.

இதன் காரணமாக இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் தோல்வி தற்போதே உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே பந்து வீசாமல் இருந்து வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜேம் ஆண்டர்சன் இன்று தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை கிளீன் போல்ட் செய்து ஆச்சரியமடைய வைத்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் 103 ரன்கள் அடித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மாவை அவர் ஆட்டமிழக்க வைத்ததும் ரோகித் அதிருப்தியுடன் வெளியேறினார். கடந்த ஆண்டு முழங்காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக பென் ஸ்டோக்ஸ் பந்து வீசாமல் இருந்து வந்தார்.

இதையும் படிங்க : அதை பாக்குறதுக்கு சந்தோஷமா இருக்கு.. இந்தியா பி டீம்கிட்ட இப்படியா பண்ணுவீங்க.. இங்கிலாந்தை கலாய்த்த ஃபைன்

இவ்வேளையில் 8 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் வீசிய முதல் பந்தியிலேயே அவர் விக்கெட்டை வீழ்த்தியுள்ளது அனைவரையும் வியக்க வைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த இன்னிங்சில் அவர் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளையும் பூர்த்தி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement