தவறான முடிவை எடுத்த ஸ்மித். பலிக்கடாவான பென் ஸ்டோக்ஸ்

Stokes
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டி தற்போது துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 54 ரன்கள், வார்னர் 48 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் ராஜஸ்தான் அணி 17 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் போது 12 பந்துகளை சந்தித்த ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான வில்லியம்சன் 12 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 22 ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து பிரியம் கார்க் 8 பந்துகளில் 15 ரன்களை குவிக்க சன் ரைசர்ஸ் அணி டீசண்டான ஸ்கோரை எட்டியது.

இந்த போட்டியில் நியூசிலாந்தில் இருந்து திரும்பிய பென் ஸ்டோக்ஸ் குவாரன்டைன் முடிந்து போட்டிக்கு நேரடியாக திரும்பினார். வந்த முதல் போட்டியிலேயே துவக்க வீரராக அவரை களமிறக்கி தவறு செய்தார் ஸ்மித் ஏனெனில் ஸ்டோக்ஸ் ஒரு பினிஷர் அவரை துவக்க வீரராக இறக்கியதால் தான் சந்தித்த ஆறாவது பந்திலேயே கிளீன் போல்டாகி வெளியேறினார்.

6 பந்துகளை சந்தித்த ஸ்டோக்ஸ் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை கலீல் அஹ்மது கிளீன் போல்ட் செய்து ஆட்டம் இழக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement