உலகக்கோப்பை வெற்றி எதிரொலி ஸ்டோக்ஸ்க்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ

Stokes
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகும். உலக அளவில் அதிகம் பேசப்படும் இந்த தொடர் இந்தியா பாகிஸ்தான் போன்று மிகவும் பிரசித்தி பெற்ற தொடராகும்.

Eng

- Advertisement -

ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோ ரூட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் 14 பேர் கொண்ட இந்த அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் முதல் முறையாக வாய்ப்பு பெற்று உள்ளார். அவர் கலந்து கொள்ளும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

உலக கோப்பை தொடரில் அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்த தொடரில் அவர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்குகிறது. இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மீண்டும் துணை கேப்டனாக விளையாடுகிறார்.

England

உலககோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பென் ஸ்டோக்ஸ் இந்த ஆஷஸ் தொடரில் துணை கேப்டனாக தொடர்கிறார். இங்கிலாந்து அணியின் விபரம் : ஜோ ரூட், மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், பர்ன்ஸ், பட்லர், சாம் கரண், டென்லி, ஜேசன் ராய், ஒல்லி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ்

Advertisement