வெஸ்ட் இண்டீசை புரட்டி எடுத்த இங்கிலந்து – கபில் தேவுக்கு நிகரான சாதனையை செய்த ஸ்டோக்ஸ்

Stokes
- Advertisement -

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு வந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இதை அடுத்து இந்த தொடரின் 2-வது போட்டி கடந்த மார்ச் 16-ஆம் தேதியன்று மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள பார்படாஸ் நகரில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

wi vs eng

புரட்டி எடுத்த இங்கிலாந்து:
இதை அடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க மற்றொரு தொடக்க வீரர் லீஸ் 30 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் சக வீரர் லாரென்ஸ் உடன் ஜோடி சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை அவசரமின்றி பொறுமையாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார்.

- Advertisement -

தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்து 3-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் 13 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட 91 ரன்கள் எடுத்திருந்தபோது லாரென்ஸ் அவுட்டானர். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்து வந்த கேப்டன் ஜோ ரூட் 14 பவுண்டரிகள் உட்பட சதமடித்து 153 ரன்கள் விளாசி தனது அணியை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்த பின் ஆட்டம் இழந்தார்.

Root

வெளுத்த பேன் ஸ்டோக்ஸ்:
அதனால் ஓரளவு பெருமூச்சு விட்ட வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அடுத்து வந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனக்கே உரித்தான பாணியில் அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை விளாசினார். குறிப்பாக டி20 கிரிக்கெட் ஆரம்பம் முதலே அதிரடி யுக்தியை கையாண்ட அவர் 128 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 6 சிக்ஸர் உட்பட சதம் விளாசி 120 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். குறிப்பாக சதம் அடித்த போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவர் சமீபத்தில் மறைந்த தனது தந்தைக்கு அந்த சதத்தை வானத்தை நோக்கி பார்த்து சமர்ப்பணம் செய்தார்.

- Advertisement -

இறுதியில் கிறிஸ் ஒக்ஸ் 41, பேன் போக்ஸ் 33 என அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்தால் 507/9 ரன்கள் எடுத்து வலுவான நிலையை அடைந்தபோது இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக வீராசாமி பெருமாள் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து தனது பேட்டிங்கை தொடங்கி விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 71/1 என்ற நிலையில் விளையாடி வருகிறது.

Stokes

கபில் தேவுக்கு நிகரான சாதனை:
இப்போட்டியில் 120 ரன்களை விளாசிய பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5000+ ரன்கள் மற்றும் 150+ விக்கெட்களை எடுத்த 5-வது வீரர் என்ற மகத்தான ஆல்ரவுண்டர் சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்தார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000+ ரன்கள் மற்றும் 150+ விக்கெட்களை எடுத்த ஆல்ரவுண்டர்களின் பட்டியல் இதோ:
1. சர் கேரி சோபர்ஸ் : 8032 ரன்கள் – 235 விக்கெட்கள், 93 போட்டிகள்.
2. இயன் போத்தம் : 5200 ரன்கள் – 383 விக்கெட்கள், 102 போட்டிகள்.
3. கபில் தேவ் : 5248 போட்டிகள், 424 விக்கெட்கள், 131 போட்டிகள்.
4. ஜேக் காலிஸ் : 13289 ரன்கள் – 292 விக்கெட்கள், 166 போட்டிகள்.
5. பேன் ஸ்டோக்ஸ் : 5021* ரன்கள் – 170* விக்கெட்கள், 78 போட்டிகள்.

Ben Stokes Joe Root

2. இப்போட்டியில் 153 ரன்களை விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 12-வது முறையாக 150க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 150+ ரன்களை குவித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற முன்னாள் வீரர் அலெஸ்டர் குக் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.

3. இந்த 12 150+ ஸ்கோர்களில் 7 150+ ஸ்கோர்கள் வெளிநாடுகளில் கேப்டனாக அடித்ததாகும். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 150+ ரன்கள் விளாசிய கேப்டன் என்ற ஸ்டீபன் பிளெமிங், ஸ்டீவ் வாக், ஸ்டீவ் ஸ்மித், பாப் சிம்ப்சன் ஆகிய கேப்டன்களை முந்தி புதிய உலக சாதனையை தன்னிச்சையாக படைத்தார்.

Advertisement