பந்தை தவறவிட்டதால் ஏற்பட்ட பரிதாபம். உதடு கிழிந்த நிலையில் படுத்திருக்கும் ஆஸ்திரேலிய வீரர் – யார் தெரியுமா ?

Dunk
- Advertisement -

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரைப்போல் பாகிஸ்தானிலும் ஒவ்வொரு ஆண்டும் பிஎஸ்எல் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட பிஎஸ்எல்லின் 6வது சீசன், வீரர்களுக்கு இடையே கொரானா பரவியதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இப்படி கொரனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த அத்தொடரின் எஞ்சிய போட்டிகளை தற்போது ஐக்கிய அமீரகத்தீல் நடத்தி வருகின்றது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

Dunk 2

- Advertisement -

இதற்கிடையில் அந்த தொடரில் லாகூர் குவலேண்டர்ஸ் அணியில் விளையாடி வரும் வீரர் ஒருவருக்கு பயிற்சியின்போது பந்தானது முகத்தில் பந்து பட்டு உதடு கிழிந்திருப்பதாகவும், அதற்காக ஏழு தையல்கள போடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டு வீரரான பென் டங்க், லாகூர் குவலேண்டர்ஸ் அணியில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல், சிறந்த வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கேட்ச் பிடிக்கும் பயிற்சியின்பொது கொடுக்கப்பட்ட கேட்சை அவர் தவறவிட்டதால், பந்தானது அவரின் முகத்தில்பட்டு மேல் உதட்டை கிழித்திருக்கிறது. இரத்தம் வழிந்த நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு ஏழு தையல்கள் போடப்பட்டுள்ளது. காயம் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் அவர், இந்த தொடரின் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dunk 3

அவரின் உடல்நிலைக் குறித்து பேசிய அந்த அணியின் தலைமைச் செயலாளரான சமீம் ராணா, பென் டங்கிற்கு ஏற்பட்ட காயம் நன்றாக குணமாகி வருகிறது. அவர் முழுவதும் குணமாகிவிட்டால் எங்களது அணி விளையாட இருக்கும் முதல் போட்டியிலேயே அவர் விளையாடுவார். அவர் குணமாகவில்லையென்றால் சில போட்டிகள் கழித்துதான் விளையாடுவார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

dunk 4

மீண்டும் தொடங்கப்பட்ட இந்த பிஎஸ்எல்லின் இரண்டாவது பாதியில் லாகூர் குவலேண்டர்ஸ் அணி தனது முதல் போட்டியை இஸ்லாமாபாத் யுனைடைட் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

Advertisement