
அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாடு திரும்பியது. அதனை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இங்கிலாந்து அணி மோசமாக செயல்படவே அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தனது கேப்டன் பதிவியில் இருந்தும் வெளியேறினார்.
இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் இந்திய அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த தொடரானது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சுழற்சியில் நடைபெற இருக்கிறது.
அதனால் அந்த தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் அந்த தொடரில் இந்திய அணியை வீழ்த்தி தாங்கள் அடைந்த தோல்விக்கு பழி தீர்ப்போம் என இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சொந்த மண்ணில் விளையாடுவதை விட வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி விளையாடுவது சவாலாக இருக்கும். இந்தியா தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரு அணி. எங்களால் அவர்களை வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கிறேன். அந்தத் தொடர் நிச்சயம் ஒரு சிறப்பான தொடராக அமையும்.
பும்ராவின் பந்துவீச்சை நான் எதிர்கொண்டு விட்டேன். அவர் என்ன செய்கிறார்? செய்யப் போகிறார்? என்பது எனக்கு தெரியும். அதே போன்று முகமது ஷமியும் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர்கள் இருவரையும் துவக்க ஓவர்களில் சுதாரித்து கடந்து விட்டால் நிச்சயம் பெரிய ரன்0களை அடிக்க முடியும் என்று நினைப்பதாகவும் பென் டக்கெட் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முதல் டெஸ்ட் செஞ்சுரி அடிச்சப்போ விராட் கோலியின் ஷூவை தான் போட்டிருந்தேன் – நிதீஷ் ரெட்டி பகிர்ந்த சுவாரசிய தகவல்
ஏற்கனவே டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த ஐ.சி.சி கோப்பைகளை கைப்பற்றிய இந்திய அணியானது 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கும் குறிவைத்து தயாராகி வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.