ஐ.பி.எல் நடைபெற இப்படி ஒரு வாய்ப்பு இருக்குதாம். ரசிகர்களுக்கு நற்செய்தி சொன்ன பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Ipl cup
- Advertisement -

கொரோனா வைரஸ் இந்தியாவில் படுவேகமாக பரவி வருகிறது. இந்தப் பரவலை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக தற்போது உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த கிரிக்கெட் போட்டியும் நடப்பது சந்தேகம் என்று தோன்றுகிறது.

IPL-1

- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரும் மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஏப்ரல் 15ம் தேதிக்குப் பின்னர் ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது சந்தேகம் தான் . ஏனெனில் இந்த கரோனா வைரஸ் தொற்று முழுவதும் விலக இன்னும் சில மாதங்கள் எடுக்கும் என்று தெரிகிறது.

இந்த ஐபிஎல் தொடர் நடக்காவிட்டால் பிசிசிஐக்கு பெரும் வருமான இழப்பு (3000கோடி வரை) நேரிடும். மேலும் அறிமுக வீரர்கள் அனைவரது சம்பளமும் அவர்களுக்கு கிடைக்காது. பிரபலமான வீரர்களுக்கு இது ஒரு இழப்பு இல்லை என்றாலும் அறிமுக வீரர்களின் வாழ்க்கையை இந்த தொடர் மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்தி அந்த இழப்பை சரிகட்ட வேண்டும் என்று பிசிசிஐ கடுமையாக போராடி வருகிறது. இந்த கரோனா வைரசை கட்டுப்படுத்த குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும் என்று பிசிசிஐ கணக்கிட்டுள்ளது. அந்த நான்கு மாதம் முடியும்போது ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இதற்கு ஒரு குழுவை அமைத்து அதற்கான சாதகங்களை ஆராயவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. குறிப்பாக அந்த காலகட்டத்தில் ஆசிய கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. அதனால் ஆசிய கோப்பை தொடரை வேறு ஒரு மாதத்தில் வைத்துக் கொள்ளலாம் என அந்த ஆசிய கோப்பை குறித்து கிரிக்கெட் கவுன்சிலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

CskvsMi

வெறும் 37 நாட்கள் கிடைத்தாலே ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்தி விடலாம் இதன் காரணமாக பல விஷயங்களை கையில் வைத்துக்கொண்டு திட்டம் தீட்டி வருகிறது பிசிசிஐ. இதனால் ஐ.பி.எல் தொடர் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடைபெற ஒரு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான ஒரு விடயம்தான்.

Advertisement