ஐ.பி.எல் நடைபெறுவதில் வந்துள்ள சிக்கல். பி.சி.சி.ஐ க்கு ஏற்பட்ட புதிய தலைவலி – விவரம் இதோ

IPL-1

நான்கு மாத பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடர் நடப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது அதன் பின்னர் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே இருந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Ipl cup

இந்த தருணத்தில் வைரசின் தாக்கம் குறைவாக இருந்த ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளில் தொடரை நடத்தி தருவதாக பிசிசிஐக்கு அழைப்பு விடுத்தது. மேலும் ஐபிஎல் தொடரை நடத்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது.

ஆனால் அந்த காலகட்டத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று ஐசிசி அந்த உலகக் கோப்பை தொடரை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்தது இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி விடலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படெல் கூறுகையில்… முழு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்பு இருக்கிறது மொத்தம் 60 போட்டிகளையும் அங்கு நடத்திவிடலாம் என்று தான் யோசித்து முடிவுசெய்துள்ளோம். இத்தொடர் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 7 வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். அங்கு நடத்தினால் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தி முடிக்கமுடியும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

IndvsRsa

இந்நிலையில் தற்போது திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடைபெறுவதில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது மார்ச் மாதம் கொரோனோ ஆரம்பிப்பதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க தொடரை பாதியில் ரத்து செய்த பி.சி.சி.ஐ அவர்களை மீண்டும் அவர்களது நாட்டிற்க்கு அனுப்பியது. மேலும் மற்றொரு நேரத்தில் இந்த தொடரை நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அந்த தொடரினால் இழப்பு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் தென்னாப்பிரிக்க நிர்வாகம் ஐபிஎல் தொடருக்கு முன்னர் எப்படியாவது இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோத வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இத்தொடரை நடத்துவது இந்த சூழ்நிலையில் கடினம் என்று பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.