IND vs ENG : கேப்டன் ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பி.சி.சி.ஐ – காரணம் என்ன?

rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான எஞ்சியிருந்த ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி ஆட்டம் கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த போட்டி தற்போது நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து அணி பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் முதன்மை சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான அஷ்வின் கொரோனா காரணமாக இன்னும் இந்திய அணியுடன் இணையாமல் இருக்கிறார். இப்படி ஒரு சூழலில் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

பிசிசிஐ இப்படி இவர்கள் இருவரையும் எச்சரிக்கை என்ன காரணம்? என்பது குறித்த கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ள நிலையில் அதற்கான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இம்முறை இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு பயோ பபுள் வளையம் ஏதும் வரையறுக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் வெளியில் சென்று வந்தனர்.

குறிப்பாக ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் எந்தவித முக கவசமும் அணியாமல் இங்கிலாந்து தெருக்களில் நடந்து சென்று ஷாப்பிங்கில் ஈடுபட்டது மட்டுமின்றி ரசிகர்களுடன் நெருக்கமாக நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். ஏற்கனவே இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கொரோனா பாதிப்பு காரணமாக அணியில் இணையாமல் உள்ள நிலையில் தற்போது மீண்டும் இவர்கள் இப்படி எந்த ஒரு பாதுகாப்பு அம்சங்களும் இன்றி பொது வெளியில் சுற்றித் திரிவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதே போன்று இவர்கள் இருவருக்கும் ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டால் மீண்டும் இந்த போட்டி பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் முக கவசம் அணியாமலும், எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி வெளியே சுற்றக் கூடாது என்றும் சரியான பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து இங்கிலாந்தில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பி.சி.சி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தீபக் சாஹர் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லையாம் – வெளியான மெடிக்கல் ரிப்போர்ட்

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக உலகெங்கிலும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக வீரர்கள் அனைவரும் பயோ பபுள் வளையத்திற்குள் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விளையாடி வந்த வேளையில் தற்போதுதான் கிரிக்கெட் கொஞ்ச கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில் பி.சி.சி.ஐ வீரர்களை எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement