ஐபிஎல் 2025 எப்போது துவங்குகிறது? சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய அணி எப்போது வெளியாகும்? ராஜிவ் சுக்லா அறிவிப்பு

Rajiv Shukla
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வழக்கம் போல இந்த வருடமும் கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக பாகிஸ்தானில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி நடக்கவுள்ளது. அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது என்று இந்தியா அடம் பிடித்து வந்தது. அதை ஏற்றுக் கொண்ட ஐசிசி இந்தியாவின் போட்டிகள் துபாயில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

அந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தங்களுடைய அணிகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது லேசான காயத்தை சந்தித்தார்.

- Advertisement -

இந்திய அணி எப்போது:

எனவே அவருடைய காயத்தின் தன்மை இன்னும் தெரியவில்லை. அதன் காரணமாக இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வரும் 18 – 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா அவர்கள் அறிவித்துள்ளார்.

அன்றைய தேதிகளில் இந்திய அணி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்வு குழு கூட்டம் நடைபெற்று விவரங்கள் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி துவங்கும் என்று ராஜிவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கான அட்டவணை சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பின் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா நிலை:

அதே சமயம் 2025 மகளிர் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அது போக ஜெய் ஷா பிசிசிஐ அமைப்பில் இருந்து விலகி ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ளார். எனவே அவருக்கு பதிலாக தேவஜீத் சைக்கா புதிய பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்க உள்ளதாகவும் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து டி20 தொடரில் அவரை ஏன் சேக்கலனு எனக்கு குழப்பமா இருக்கு – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தை சந்தித்துள்ளதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குறைந்தபட்சம் லீக் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் விலகினால் இந்திய அணி வெல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே அவர் குணமடைந்து விளையாட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement