பும்ராவின் காயம் எப்படி இருக்கிறது? சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடுவாரா? – பி.சி.சி.சி சார்பில் வெளியான தகவல்

Bumrah
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா காயமடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பந்து வீசிய பும்ரா இரண்டாம் நாள் அன்று அசவுகரியத்தை உணர்ந்தார்.

பும்ரா இந்திய அணிக்கு எப்போது திரும்புவார் :

அதன் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார். அப்படி செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் பும்ராவிற்கு முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு இருப்பது உறுதியானது.

- Advertisement -

இதன் காரணமாக அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது பந்துவீச வரவில்லை. அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசாதது ஆஸ்திரேலிய அணிக்கு பக்கபலமாகவும், இந்திய அணிக்கு பின்னடைவாகவும் மாறியது.

இந்நிலையில் பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய எவ்வளவு நாட்கள் ஆகும்? அவருக்கு எந்த வகையான காயம் ஏற்பட்டிருக்கிறது? என்பது குறித்து தெளிவான தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பி.சி.சி.ஐ சார்பாக பும்ராவின் உடல்நிலை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பும்ராவிற்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயம் எந்த கிரேடில் இருக்கிறது? என்பது உறுதியாகவில்லை என்றாலும் எத்தனை நாட்களில் அவர் திரும்ப வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி வர குறைந்தது மூன்று வாரங்களில் இருந்து அதிகபட்சமாக 8 வாரங்கள் வரை தேவைப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம் – சவுரவ் கங்குலி கருத்து

இதன் காரணமாக பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தயாராகும் வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் அவர் மீண்டும் திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement