பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம் – சவுரவ் கங்குலி கருத்து

Ganguly
- Advertisement -

அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு பல்வேறு விமர்சனங்களை இந்திய அணியின் மீது எழுப்பு உள்ளது.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் :

அதிலும் குறிப்பாக கடந்த இருமுறை ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றி பெற்ற இந்திய அணி இம்முறையும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்ட இந்த தொடரில் இந்திய அணி இப்படி படுதோல்வியை சந்தித்தது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

அதோடு இந்திய அணி பெற்ற இந்த தோல்வி மீது பல்வேறு விமர்சனங்களும் தொடர்ச்சியாக இருந்து வருகின்து. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடர் முழுவதுமே நமது அணி சரியாக பேட்டிங் செய்யவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களால் போட்டிகளை வெல்ல முடியாது. அதிலும் குறிப்பாக 170 முதல் 180 ரன்கள் அடித்துவிட்டு டெஸ்ட் போட்டிகளை வெல்வது என்பது எளிதான ஒன்று கிடையாது.

- Advertisement -

குறைந்தபட்சம் 350-400 ரன்கள் வரை அடித்தால் தான் போட்டிகளை வெற்றி பெற முடியும். இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் குறை சொல்ல முடியாது. அனைவருமே ரன்களை அடித்திருக்க வேண்டும். ஆனால் அதனை நமது வீரர்கள் செய்ய தவறிவிட்டனர்.

இதையும் படிங்க : பும்ரா இல்லனா 5 – 0ன்னு தோத்துருப்போம்.. இதை செய்யலன்னா ரோஹித், கோலி இங்கிலாந்துக்கு வேணாம்.. ஹர்பஜன் சிங்

அதேபோன்று பந்துவீச்சில் ஒருவரை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. பும்ரா தனி ஒருவராக இந்த தொடரில் போடாடினார். அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் பெரிய அளவில் முனைப்பு காட்ட வில்லை என்றும் தோன்றுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement