எல்லாமே உங்க இஷ்டம் தான்.. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு – பி.சி.சி.ஐ வைத்த முக்கிய கோரிக்கை

BCCI
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டியில் பங்கேற்று விளையாடி இருந்தனர். ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேற அதிலிருந்து இதுவரை அவர்கள் இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடவில்லை.

அதேநேரத்தில் இந்திய அணி 50 ஓவர் உலககோப்பை தொடருக்காக தயாராகி வந்ததால் அதில் கவனம் செலுத்தவே அவர்கள் டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்ற ஒரு கருத்து இருந்து வந்தது. அந்த நேரத்தில் ஹார்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட டி20 அணி கட்டமைக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலேயே டி20 உலக கோப்பை தொடருக்கான அணியையும் தயார் செய்வதாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரையும் இழந்த இந்திய அணியில் வயது மூத்த வீரர்களாக இருக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது எதிர்காலம் குறித்தே தற்போது பலரும் பேசி வருகின்றனர்.

இனியும் அவர்கள் இருவரும் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் தொடர்வது கடினம் என்பதால் டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் என்ற ஒரு கருத்தும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவர்கள் இருவரும் விளையாட வாய்ப்பு இருக்கிறதா? என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மத்தயில் உள்ளது.

- Advertisement -

ஆனால் பிசிசிஐ அவர்கள் இருவரின் டி20 எதிர்காலம் குறித்த முடிவை அவர்களிடமே விட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்கள் எவ்வாறு தானாக முன்வந்து டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு விலகினார்களோ அதேபோன்று ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோரும் தானாக விலகும் முடிவினை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வேற லெவல் பிளேயர்.. ஆனா சுந்தரிடம் இருக்கும் ஒரே பிரச்சனை அது தான்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

ஆனாலும் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியான தகவலின் படி : ரோஹித் மற்றும் கோலி இருவரும் டி20 கிரிக்கெட்டில் தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்த முடிவை நாங்கள் அவர்கள் இருவரிடமே விட்டு விட்டோம். அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ, அதற்கு ஏற்றார் போன்று அணித்தேர்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பிடம் தற்போது 35,36 வயதினை எட்டிய அவர்கள் இருவரும் நிச்சயம் டி 20 கிரிக்கெட்டில் இருந்து விலகுவார்கள் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement