
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வேளையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாக அறிவித்திருந்தனர். அதுமட்டும் இன்றி 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை தங்கள் விளையாட விரும்புவதாகவும் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இவர்கள் இருவரும் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த அவர்கள் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்திருந்தனர். கடைசியாக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெற்றிருந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2027 உலக கோப்பை வரை தொடர்ந்து விளையாட விரும்புகின்றனர்.
ஆனால் அடுத்த உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இடைவெளி இருப்பதாலும், அந்த உலகக் கோப்பை தொடரின் போது கிட்டத்தட்ட அவர்கள் இருவருக்குமே 40 வயதை நெருங்கிவிடும் என்பதனாலும் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தற்போது அவர்களது எதிர்கால கிரிக்கெட் விடயத்தில் ஒரு முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் வெளியான தகவலின் படி : நாங்கள் விரைவில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது எதிர்காலம் குறித்து ஆலோசிக்க உள்ளோம். அடுத்த உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாலும் அவர்கள் இருவரும் அப்போது 40 வயதினை நெருங்குவார்கள் என்பதனாலும் சில முக்கிய முடிவுகளை எடுத்தாக வேண்டிய அவசியம் உள்ளது.
கடைசியாக 2011 ஆம் ஆண்டு தான் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருந்தது. எனவே இனி வருங்காலத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதனால் சில முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக வழங்கிய பங்களிப்பு அளப்பரியது.
இதையும் படிங்க : கோவம், வெறி மட்டுமல்ல.. விராட் கோலியால் தான் இன்னைக்கு சிராஜ் நல்லா இருக்காரு – சிராஜ் சகோதரர் பேட்டி
ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவர்கள் இருவரையும் நாங்கள் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுமாறு கட்டாயப்படுத்த முடியாது. அந்த முடிவு அவர்களது கையில் தான் உள்ளது. ஆனாலும் அடுத்த உலக கோப்பை தொடர் வரை அவர்களது இடத்தின் நிலை என்பது உறுதியானது கிடையாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.