2023 உ.கோ’க்கு 20 பேர் ரெடி, ஃபிட்னெஸ் முதல் செலக்சன் வரை – இந்திய அணியில் பிசிசிஐ செய்யும் 4 அதிரடி மாற்றங்கள்

BCCI-and-Rohit
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கும் இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராகவும் சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து புதிய அணியை உருவாக்கும் வேலையை தொடங்கியுள்ள பிசிசிஐ 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையில் தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான சீனியர்கள் அடங்கிய முதன்மை அணி விளையாட அனுமதி கொடுத்துள்ளது.

இருப்பினும் 2022ஆம் ஆண்டு இருதரப்பு தொடர்களை வென்ற இந்திய அணி ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வழக்கம் போல சொதப்பலாக செயல்பட்டு எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை நிரூபித்தது. அதை விட பணிச்சுமை என்ற பெயரில் பெரும்பாலும் ரோகித் சர்மா எடுத்ததால் வரலாற்றிலேயே முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய பரிதாபமும் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதையும் தாண்டி ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடஜா, தீபக் சஹர் போன்ற முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைந்து வெளியேறியது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

- Advertisement -

அதிரடி மாற்றங்கள்:
ஆனால் அதே வீரர்கள் ஐபிஎல் தொடரில் பணத்துக்காக ஓய்வெடுக்காமல் விளையாடுவது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. மொத்தத்தில் தற்சமயத்தில் ஃபிட்னஸ் என்பது இந்திய அணியில் முக்கிய பிரச்சினையாக நிலவுகிறது. இந்நிலையில் மும்பையில் இன்று கூடிய பிசிசிஐ தலைமை கூட்டத்தில் 2023 உலகக் கோப்பையில் விளையாடும் உத்தேச 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதே சமயம் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடாமல் தேவையான ஓய்வெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதை விட யோ-யோ டெஸ்ட் எனப்படும் முழுமையான ஃபிட்னஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் வீரர்களை மட்டுமே இனி இந்தியாவுக்கு விளையாட தேர்வு செய்வது என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி கூட்டத்தின் முடிவில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளப்பட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“ஞாயிற்றுக்கிழமை மும்பையில் பிசிசிஐ தலைமையில் இந்திய அணியின் மறு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் பிசிசிஐ தலைவர் ரோஜா பின்னி, செயலாளர் ஜெய் ஷா, கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், என்சிஏ தலைவர் லக்ஷ்மன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் வீரர்களின் பணிச்சுமை, ஃபிட்னஸ், 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது”

அதன் முடிவில் பரிந்துரைக்கப்பட்ட 4 முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:
1. வளர்ந்து வரும் இளம் வீரர்கள் தேசத்துக்காக விளையாட வேண்டுமெனில் முதலில் குறிப்பிட்டளவு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

- Advertisement -

2. இப்போதிலிருந்து யோ-யோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா ஆகியவை வீரர்களை தேர்வு செய்வதற்கு ஒரு அளவுகோலின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் குறிப்பிட்ட மத்திய வீரர்கள் தனிப்பயனாக்கப்பட்ட வழியில் கவனிக்கப்படுவார்கள்.

3. மேலும் 2023 ஐசிசி உலக கோப்பையை மனதில் வைத்து அதில் விளையாட போகும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் எந்த அளவுக்கு விளையாடுவார்கள் என்பதை அந்தந்த அணி நிர்வாகிகளுடன் என்சிஏ தொடர்ந்து விவாதித்து கவனித்து வரும்.

- Advertisement -

4. மேலும் 2023 உலக கோப்பைக்காக பிசிசிஐ 20 உத்தேச வீரர்களை தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பரிந்துரைத்துள்ளார்.

இதையும் படிங்க2022 டி20 உலக கோப்பையில் அஷ்வினை செலக்ட் பண்ணது தப்பு தான், அவர் விளையாடிருக்கணும் – டிகே ஓப்பன்டாக்

இந்த அறிவிப்பிலிருந்து இனிமேல் ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது உள்ளூர் கிரிக்கெட்டில் போதுமான அளவுக்கு விளையாடியிருந்தால் மட்டுமே இளம் வீரர்கள் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிய வருகிறது. மேலும் இந்தியாவுக்காக விளையாட தேர்வாகும் வீரர்கள் முதலில் யோ-யோ பிட்னெஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதைவிட உலக கோப்பையில் விளையாடுவார்கள் என்று கருதப்படும் வீரர்கள் முழுமையாக ஐபிஎல் தொடரில் விளையாடாமல் போதிய ஓய்வெடுக்க வகையில் அந்தந்த அணி நிர்வாகிகளிடம் என்சிஏ பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்றுக் கொடுக்கும் என்று தெரிய வருகிறது.

Advertisement