சற்றுமுன் : ஐ.பி.எல் தொடர் நிறுத்தம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ – எப்போ வரைக்கும் தெரியுமா ?

IPL

இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் டி20 தொடரின் 14 வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற நடைபெற இருந்த 30வது லீக் போட்டி கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு ஏற்பட்ட கரோனா வைரஸ் காரணமாக போட்டி நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ipl

இந்நிலையில் அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள பட்டு வருவதால் இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று வெளியான கொரோனா பரிசோதனை பட்டியலில் டெல்லி அணி சார்பில் அமித் மிஸ்ராவிற்கும், சன்ரைசர்ஸ் அணி சார்பில் விருதிமான் சாஹாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா பரவல் தொடங்கியுள்ளதால் இந்த ஐபிஎல் தொடரானது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பி.சி.சி.ஐ யின் துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

sukla

மேலும் அவர் கூறிய இந்த தகவலின் படி இந்த ஐபிஎல் தொடர் முற்றிலுமாக ரத்து செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்த அறிவிப்பு பிசிசிஐ சார்பில் இருந்து வெளியாகும் வரை இந்த ஐபிஎல் தொடரானது தற்காலிகமாக மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதே தவிர இந்த தொடர் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனால் பிசிசிஐ-யிடமிருந்து அடுத்த தகவல் வரும் வரை போட்டிகள் நடைபெறாது என்றும் முறையான அறிவிப்பு வெளியானால் மட்டுமே இந்தத் தொடர் நடக்க சாத்தியம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.