ஆசிய கோப்பையில் ஏற்பட்ட பிரச்சனையை டி20 உலக கோப்பையில் தவிர்க்க பிசிசிஐ அதிரடி முடிவு – முழுவிவரம்

Avesh-Khan
Advertisement

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைய விவாதங்களை எழுப்பியுள்ளது. அதில் காயத்தை சந்தித்து விலகியதால் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்திக்க நேரிட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பியது பலத்தை சேர்கிறது என்றாலும் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆசிய கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் அடிப்படையில் நிலவிய மிகப்பெரிய பிரச்சனை தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதாவது வேகத்துக்கு கொடுக்கக்கூடிய துபாயில் குறைந்தது 4 முழுநேர பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

IND

ஆனால் புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய 3 முழுநேர வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் கச்சிதமாக தேர்வு செய்த தேர்வுக்குழு 4வதாக ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்திருந்தது. அந்த தவறு ஆரம்பத்தில் தெரியாத நிலைமையில் ஆசிய கோப்பையின் போது ரன்களை வாரி வழங்கியதால் அதிரடியாக நீக்கப்பட்ட ஆவேஷ் கானுக்கு பதில் தேர்வு செய்ய அணியில் எக்ஸ்ட்ராவாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இல்லாத காரணத்தால் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்த வேண்டிய அவல நிலை தேர்வுக்குழுவின் தவறை அம்பலப்படுத்தியது.

- Advertisement -

சொதப்பிய தேர்வுக்குழு:
அதனால் தோல்வி பரிசாக கிடைத்த நிலையில் செய்த தவறை மறைப்பதற்காக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருந்த தீபக் சஹரை அவசர அவசரமாக அணி நிர்வாகம் முதன்மை அணிக்குக் கொண்டு வந்து வாய்ப்பளித்தது. ஆனால் அதற்குள் வெற்றி பறிபோனதால் பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது. அதனால் உலக கோப்பையில் தீபக் சஹர் மற்றும் முகமத் ஷமி போன்ற அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டுமென ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கோரிக்கை வைத்தனர்.

Deepak Chahar 1

மேலும் அந்த தவறை செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பியபோது உலகக் கோப்பைக்கு முன்பாக சோதனை முயற்சி என்று கேப்டன் ரோகித் சர்மா கூலாக பதிலளித்து தேர்வுக்குழுவின் தவறை மறைக்க உடந்தையாக இருந்தது ரசிகர்கள் கடுப்பாகி விட்டது. அந்த நிலைமையில் வேகத்திற்கு இயற்கையாகவே கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் மீண்டும் மிகச் சரியாக 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஷமி மற்றும் சஹர் ஆகியோரை ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே சேர்த்துள்ள தேர்வுக்குழு மீண்டும் அதே தவறை செய்துள்ளது.

- Advertisement -

அதனால் அந்த தவறை மீண்டும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சுட்டிக்காட்டி வருகிறார்கள். குறிப்பாக வேகத்துக்கு கை கொடுக்க கூடிய ஆஸ்திரேலியாவில் 4 பந்துவீச்சாளர்களை மட்டும் தேர்வு செய்து இந்தியா ரிஸ்க் எடுப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார். அதனால் விழிப்படைந்துள்ள இந்திய அணி நிர்வாகம் ஆசிய கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக இருந்த பிரச்சனை உலக கோப்பையில் ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது.

Shami

ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டேண்ட்-பை:
அதாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் படி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு வழக்கம் போல முதன்மையான 15 வீரர்கள் மட்டுமே பயணிப்பார்கள். அப்போது எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருக்கும் வீரர்களில் அணி நிர்வாகம் விரும்பும் வீரரை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் இந்தியாவிலிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று அணியுடன் இணைவதற்குள் அடுத்த போட்டிக்கான நேரம் வருவதற்கு வாய்ப்பிருப்பதால் அவர்களால் முக்கிய போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்படலாம்.

இதையும் படிங்க : ரிஸ்க் எடுக்காம வெற்றி கிடைக்குமா? பண்ட் – டிகே விவாதத்தில் இந்திய ஜாம்பவான் நியாயமான கருத்து

அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்கனவே ஸ்டேண்ட் பை வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முகமது சமி, தீபக் சஹர், ஸ்ரேயாஸ் அய்யர், ரவி பிஷ்னோய் ஆகிய 4 வீரர்களையும் முதன்மையான 15 பேர் கொண்ட இந்திய அணியுடன் முன்னதாகவே அழைத்துச்செல்ல பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்த முடிவால் உலகக் கோப்பையின் போது திடீரென முக்கிய வீரர் காயமடையும் போது ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருக்கும் வீரர்களில் விரும்பும் வீரரை உடனடியாக அணியில் இணைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement