- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்ரேயாஸ் ஐயர் நமக்கெல்லாம் சர்ப்ரைஸ் தரப் போறாரு.. மகிழ்ச்சியான அப்டேட் கொடுத்த பிசிசிஐ செயலாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் காயமடைந்தார். அந்தப் போட்டியில் அபாரமான கேட்ச் பிடித்த அவர் கீழே விழுந்த போது தோள்பட்டை பகுதியில் காயத்தை சந்தித்தார். அதனால் மேற்கொண்டு விளையாட முடியாத அவரை இந்திய அணி மருத்துவர்கள் உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவருடைய காயத்தை மருத்துவர்கள் சோதித்த போது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் ஸ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதை அடுத்து அவருடைய குடும்பம் சிட்னிக்கு சென்று அவரைப் பார்க்க பிசிசிஐ ஏற்பாடு செய்தது.

- Advertisement -

சர்ப்ரைஸ் தருவாரு:

தொடர்ந்து சிகிச்சை பெற்றதில் ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டதாக நேற்று செய்தி வெளியானது. அத்துடன் தாம் அனுப்பிய மெசேஜுக்கு ஸ்ரேயாஸ் பதில் கொடுத்ததால் நன்றாக இருக்கிறார் என்று நம்புவதாக இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு மோசமாக இல்லை என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

அதனால் எதிர்பார்த்ததை விட ஸ்ரேயாஸ் வேகமாக குணமடைந்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் ஐயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அவர் வேறு மாதிரியான செயல்முறைக்குள் சென்றுள்ளார். அதனாலேயே அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். தற்போது அவர் மிகவும் நன்றாக இருக்கிறார்”

- Advertisement -

செயலாளர் நம்பிக்கை:

“மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட அவருடைய குணமடையும் நேரம் வேகமாக இருக்கிறது. சிட்னியில் அவருடன் இருக்கும் இந்திய அணியின் மருத்துவர் ரிஸ்வான் கானுடன் நான் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறேன். இங்கிருந்து ஸ்ரேயாஸ் முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் எடுத்துக் கொள்வார். அதற்கு முன்பாகவே அவரிடமிருந்து நீங்கள் சர்ப்ரைஸை எதிர்பார்க்கலாம்”

இதையும் படிங்க: இந்தியாவுக்காக அந்த எல்லாத்துக்கும் தயாரா இருக்கேன்.. முடிவு அகர்கர் கையில் இருக்கு.. ஷமி பேட்டி

“ஏனெனில் அவர் முன்னதாகவே குணமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவருடைய குணமடையும் செயல்முறைகளில் மருத்துவர்கள் திருப்தியடைந்துள்ளனர். தற்போது அவர் சாதாரண நிலைக்கு வந்துள்ளார். ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாலேயே அவர் நேற்று தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார்” என்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.

- Advertisement -