- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையிலும்.. பாகிஸ்தானுடன் இந்தியா கை குலுக்காதா? பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர். அதற்கு பதிலடியாக ஆசியக் கோப்பையின் லீக் சுற்று போட்டி முடிவில் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இந்திய அணி வெளியேறியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.

அடுத்து நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் ஃபர்ஹான், ஹரிஷ் ரவூப் ஆகியோர் இந்தியாவை கலாய்க்கும் வகையில் சைகைகளால் செய்து காட்டியது மற்றொரு சர்ச்சையை உண்டாக்கியது. இறுதியில் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் மோசின் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆனால் அவருடைய தலைமையில் இந்திய அணி கோப்பையை வாங்க முடியாது என்று தெரிவித்து விட்டது.

- Advertisement -

மகளிர் உலகக் கோப்பையில்:

அதனால் ஏமாற்றமடைந்த அவர் கையோடு கோப்பையை எடுத்துச் சென்று விட்டார். அதற்காக அசராத இந்திய அணி கையில் கோப்பை இருப்பது போல் கொண்டாடி அவருக்கு பதிலடி கொடுத்தது. இதற்கிடையே இந்தியாவில் ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை துவங்கி நடைபெற்று வருகிறது. அத்தொடரில் பாகிஸ்தான் தங்களுடையப் போட்டிகளை இலங்கையில் விளையாட உள்ளது.

அங்கே பாகிஸ்தான் அணியை இந்திய அணி வரும் அக்டோபர் 5ஆம் தேதி எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தானுடன் கைகுலுக்காதா? என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு. “எதையும் என்னால் முன்னறிவிப்பு செய்ய முடியாது. ஆனால் அந்தக் குறிப்பிட்ட விரோத நாட்டுடன் எங்களுடைய உறவு அப்படியே இருக்கிறது”

- Advertisement -

இந்தியா கைகுலுக்குமா:

“கடந்த ஒரு வாரத்திற்குள் எதுவும் மாறவில்லை. கொழும்புவில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டியில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும். கிரிக்கெட்டுக்காக எம்சிசி வரையறுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவோம் என்று உறுதிப்படுத்த முடியும். ஆனால் அங்கே கைகுலுக்கல் நடக்குமா? கட்டிப்பிடிப்பு நடக்குமா? போன்ற விஷயங்களை என்னால் தற்சமயத்தில் உறுதிப்படுத்த முடியாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: வலுவான திறமையுடைய இந்திய அணி.. பாகிஸ்தானிடம் இப்படி செஞ்சது முறையல்ல.. ஏபிடி அதிருப்தி பேட்டி

அதாவது ஒரு வாரத்தில் பாகிஸ்தானுடன் இருக்கும் மோசமான உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சைக்கியா தெரிவிக்கிறார். இதிலிருந்து மகளிர் உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுடன் இந்திய அணி கைகுலுக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி ஆசியக் கோப்பையை போல அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய மகளிரணி விளையாடும் என்று சைக்கியா கூறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -