வலுவான திறமையுடைய இந்திய அணி.. பாகிஸ்தானிடம் இப்படி செஞ்சது முறையல்ல.. ஏபிடி அதிருப்தி பேட்டி

AB De Villiers
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா சாய்த்தது. அதனால் அத்தொடரில் பாகிஸ்தானை ஹாட்ரிக் முறையாக தோற்கடித்த இந்தியா 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.

இருப்பினும் அவருடைய கைகளால் இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்து விட்டது. அதனால் ஏமாற்றமடைந்த அவர் இந்தியா எப்படி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக கையோடு கோப்பையை எடுத்துச் சென்றார். மறுபுறம் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் வேறு யாரிடமாவது கொடுத்துக் கோப்பையை கொடுப்பார் என்று இந்திய அணி மைதானத்திலேயே காத்திருந்தது.

- Advertisement -

இந்தியாவின் செயல் முறையல்ல:

இறுதியில் இந்திய அணி வாங்க மறுத்ததால் கோப்பை வழங்கப்படவில்லை என்று ஆசிய கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2025 ஆசியக் கோப்பையை வென்ற இந்தியா மிகவும் வலுவான திறமையுடைய அணி என்று ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் விளையாட்டில் அரசியலைக் கலக்கும் வகையில் ஆசிய கவுன்சில் தலைவர் கையில் இந்திய அணி கோப்பையை வாங்காமல் சென்றது முறையல்ல என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கோப்பையை யார் கொடுக்கிறார் என்பதில் இந்திய அணி மகிழ்ச்சியாக இல்லை. இருப்பினும் அது விளையாட்டுக்கு சொந்தமானது என்று நான் கருதவில்லை. அரசியல் அதற்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும். விளையாட்டு ஒரு விஷயம். அது அதனுடைய வழியில் கொண்டாடப்பட வேண்டும்”

- Advertisement -

ஏபிடி கருத்து:

“ஆனால் இப்படி நடந்ததைப் பார்த்தது கொஞ்சம் வருத்தமளிக்கிறது. இந்த விஷயங்கள் வருங்காலங்களில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். அப்படி செய்வது நமது விளையாட்டையும் வீரர்களையும் கடினமான இடத்தில் இட்டுச் செல்லும். அதைப் பார்ப்பதை நான் வெறுக்கிறேன். ஆசியக் கோப்பையின் இறுதியில் அப்படி நடந்ததைப் பார்த்தது அலங்கோலமானதாக இருந்தது”

இதையும் படிங்க: அனுபவமில்லாத வெ.இ அணிக்கு எதிராக இத்தனை பவுலர்ஸ் எதுக்கு? அவரை சேர்த்திருக்கலாம் – ரசிகர்கள் கருத்து

“இங்கே நாம் மிகவும் முக்கியமான கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியா மிகவும் வலுவான அணியாக தென்படுகின்றனர். அடுத்து வரும் டி20 உலகக் கோப்பைக்கு முன் அவர்கள் தங்களை வலுவாகக் கட்டமைத்து வருகிறார்கள். உலகக்கோப்பை தொலைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிறைய திறமையைக் கொண்டுள்ள இந்திய அணி பெரியத் தருணங்களில் சிறப்பாக விளையாடுகின்றனர்” என்று கூறினார்.

Advertisement