எல்லாம் ஓகே.. ஷ்ரேயாஸ் ஐயர் முழுசா ரெடி ஆகிட்டாரு.. பி.சி.சி.ஐ கொடுத்த கிரீன் சிக்னல் – விவரம் இதோ

Shreyas Iyer
- Advertisement -

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனும், நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது விளையாடி இருந்தார். அந்த தொடரின் இடையே ஒரு போட்டியின் போது கேட்ச் பிடிக்க சென்ற அவர் டைவ் அடிக்கையில் பந்து அடி வயிற்றில் தாக்கி பலத்த காயத்தை சந்தித்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் : பி.சி.சி.ஐ

அதன் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு வந்தார். அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்ததாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் அவர் தவறவிட்டார்.

- Advertisement -

பின்னர் காயத்திலிருந்து படிப்படியாக மீண்ட அவர் மெல்ல மெல்ல பயிற்சிகளை ஆரம்பித்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரில் விளையாடவுள்ளார். ஏற்கனவே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது ஷ்ரேயாஸ் ஐயர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்திருந்தார்.

இப்படி இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடித்திருந்தாலும் அவரது உடற்தகுதியை பொறுத்தே அவர் நியூசிலாந்து தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ஒரு தகவலின் படி :

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயர் தனது உடற்தகுதியை முழுவதுமாக நிரூபித்து விட்டார் என்றும் அவர் தற்போது அனைத்து விதமான தடைகளையும் கடந்துவிட்டார் எனவே அவர் நியூசிலாந்து அணிக்கு ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு தயாராகவும், தகுதியாகவும் இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சுப்மன் கில் இல்லை.. இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் – மார்க் வாக் கருத்து

இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் நிச்சயம் துணை கேப்டனாக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது வரும் ஜனவரி 11-ம் தேதி வடோதராவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement