ஐ.பி.எல் நடக்கலனா வீரர்களின் சம்பளம் பிடித்தமா ? எங்களது நடவடிக்கை இதுதான் – பி.சி.சி.ஐ தகவல்

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இருமுறை தள்ளிவைக்கப்பட்டு பின்பு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட காரணத்தினால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் இந்த தொடரானது செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் அதும் வெளிநாடுகளில் நடக்கலாம் என்று செய்திகள் ஏற்கனவே வெளியாகின.

Ipl cup

- Advertisement -

இதனையடுத்து அதிகாரபூர்வமாக செய்தியை வெளியிட்ட பிசிசிஐ நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதாலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் ஒத்தி வைக்கப்படுகின்றன என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியை நடத்த முடியாமல் போனால் பிசிசிஐக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்வந்து தங்களது நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த கேட்டுக்கொண்டது.

மேலும் அதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐக்கு தங்களது நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த கேட்டுக்கொண்டது. ஆனால் இவ்விரு நாடுகளுக்கும் பிசிசிஐ எந்த ஒரு பதிலும் கூறவில்லை மேலும் ஐபிஎல் போட்டிகள் நடக்காத பட்சத்தில் வீரர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.

IPL-1

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனியார் நாளிதழுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில் : எங்களுடைய நிதி நிலைமை குறித்து நாங்கள் ஆராய வேண்டும் இந்த தொடர் நடைபெறாமல் போனால் 4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தினால் வீரர்களின் சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்யப்படும் ஆனால் போட்டிகள் நடந்தால் இதுபோன்ற பிடித்தம் இருக்காது என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில் : பிசிசிஐ தன்னுடைய செலவை குறைக்கும் திட்டத்தை கடந்த ஆண்டே தொடங்கி விட்டது அதாவது கொரோனா பாதிப்பு இருக்கும் முன்பே செலவை குறைக்க ஆரம்பித்ததால் ஊழியர்களின் சம்பளத்தில் எந்த மாற்றமும் இருக்காது ஆனால் ஆடம்பர செலவுகளை மட்டுமே பிசிசிஐ குறைத்துள்ளது.

இதனால் ஐபிஎல் போட்டிகள் நடை பெறாமல் போனால் பெரும் இழப்புதான் என்றாலும் போட்டியை நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வீரர்களின் சம்பள விவகாரத்தில் இன்னும் பி.சி.சி.ஐ இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement