என்ன நடந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிரா விளையாடவே முடியாது. பி.சி.சி.ஐ திட்டவட்டம் – நடந்தது என்ன?

IND vs PAK Babar Azam Rohit Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த 2007-ஆம் ஆண்டு நேரடி டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு எல்லை பாதுகாப்பு விவகாரம் காரணமாக இருநாட்டு அரசாங்கத்திற்கும் இடையேயான சுமூகமில்லா உறவு காரணமாக நேரடி கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடாமல் இருந்து வருகிறது. ஆனாலும் ஐசிசி நடத்தும் பொதுவான தொடர்களில் வெளிநாட்டு மண்ணில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.

INDvsPAK

- Advertisement -

அப்படி பொதுவான தொடர்களில் இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் மார்ட்டின் டார்லோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வைத்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து பாகிஸ்தான் நிர்வாகத்துடன் பேசியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து நிர்வாகம் எடுத்துள்ள இந்த டெஸ்ட் தொடர் நடவடிக்கை குறித்து பேட்டியளித்த பி.சி.சி.ஐ மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது சொந்த ஆதாயங்களுக்காக இந்த வாய்ப்பை வழங்கினாலும் நாங்கள் அங்கு சென்று பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடப்போவதில்லை.

INDvsPAK

மேலும் அவர்கள் கூறியபடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர்பானது நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை என்று நேரடியாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏனெனில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் நேரடி இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் குறித்த முடிவுகளை எடுக்கப் போவது பி.சி.சி.ஐ-யை கிடையாது. மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே அது நடைபெறும். மத்திய அரசின் சம்மதம் இல்லாமல் பிசிசிஐ-யால் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது.

இதையும் படிங்க : பேரை கேட்டாலே அதிரும் – சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆக்ரோசமான 5 கேப்டன்களின் பட்டியல்

மற்றபடி இந்திய அணி வெளிநாடுகளில் பிற அணிகள் பங்கேற்கும் பொதுவான தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் கலந்துகொண்டு விளையாடும். மற்றபடி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நேரடி இருதரப்பு தொடர் என்பதற்கு வாய்ப்பே கிடையாது என அந்த மூத்த நிர்வாகி பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement