பேரை கேட்டாலே அதிரும் – சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆக்ரோசமான 5 கேப்டன்களின் பட்டியல்

Ganguly
- Advertisement -

கிரிக்கெட் என்பது 11 வீரர்கள் கொண்ட அணி விளையாட்டு என்றாலும் அதை வழிநடத்தும் கேப்டன் அதனுடைய வெற்றிகளில் மிகப்பெரிய பங்காற்ற கூடியவராக பார்க்கப்படுகிறார். ஏனெனில் தனது துறையில் சிறப்பாக செயல்பட்டதால் தம்மால் அணியை வழிநடத்த முடியும் என நம்பி வாரியம் ஒப்படைக்கும் கேப்டன்ஷிப் பதவியேற்பவர் தனது அணியை மட்டுமல்லாமல் தனது ஒட்டுமொத்த தாய்நாட்டையும் வழி நடத்துவதற்கு சமமாகும். அதனால் தன்னுடைய சொந்த செயல்பாடுகளையும் பார்த்துக்கொண்டு சரியான 10 வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பையும் ஆதரவையும் கொடுத்து வெற்றியை நோக்கி முன்னின்று நடத்துவது கேப்டனின் தலையாய கடமையாகும்.

Dhoni

- Advertisement -

பொதுவாக கேப்டன்ஷிப் செய்வதில் 2 வகைகள் உள்ளன. ஒன்று தோல்வியடைந்தாலும் பதறாமல் தோனி போல் கூலாகவே இருப்பது மற்றொன்று ஒவ்வொரு செயல்பாடுகளிலும் அதிரடியான முடிவுகளை எடுத்து ஆக்ரோசமக மிரட்டலாக செயல்படுவதாகும். இதில் ஆக்ரோசமாக செயல்படும் கேப்டன்ஷிப் மிகவும் ஆபத்தானது.

ஏனெனில் வெற்றிக்காக எதிரணியை தீண்டும்போது கொஞ்சம் தவறினாலும் அதே ஆக்ரோஷம் பதிலடியாக கிடைத்துவிடும். ஆனாலும் சில வீரர்கள் இயற்கையிலேயே நெருப்பை போன்ற பிறப்பெடுத்து எதற்கும் அஞ்சாமல் ஆக்ரோசமான கேப்டன்ஷிப் செய்து தங்களது நாட்டுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தை பற்றி பார்ப்போம்:

5. இம்ரான் கான்: வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது அதிரடியான பந்துகளை போலவே கேப்டன்ஷிப் பொறுப்பிலும் அதிரடியான முடிவுகளை எடுத்து பாகிஸ்தானின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார். குறிப்பாக 1992 உலக கோப்பையில் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்தாலும் தனது அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக அதிலிருந்து மீண்டெழுந்து முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்த அவரது அதிரடி பெரும்பாலும் வாயில் அல்லாமல் செயல்பாடுகளில் இருக்கும் என்றே கூறலாம்.

- Advertisement -

4. ஸ்டீவ் வாக்: 1987இல் உலகக்கோப்பையை வென்று எழுச்சி காண துவங்கிய ஆஸ்திரேலியாவை அதிரடிப் படையாக மாற்றிய பெருமை இவரைச் சேரும். 1997இல் பொறுப்பேற்று 2004 வரை கேப்டனாக செயல்பட்ட இவர் உலகை மிரட்டும் அணியாக ஆஸ்திரேலியாவை உருவாக்கி 1999 உலகக்கோப்பை போன்ற சரித்திர வெற்றிகளை பதிவு செய்தார்.

Steve-Waugh

அதிலும் ஸ்லெட்ஜிங் செய்து வெற்றி பெறும் கலையை ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஆழமாக வேரூன்றச் செய்த பெருமையும் இவரையே சேரும். அந்தளவுக்கு அதிரடியும் ஆக்ரோஷமும் நிறைந்த கேப்டனான இவர் தோல்வியின் பிடியில் சிக்கினாலும் அதற்காக துவளாமல் கடைசி வரை வெற்றிக்கு போராடும் குணத்தை ஆஸ்திரேலிய அணியில் உருவாக்கிய பெருமையும் கொண்டவர்.

- Advertisement -

3. ரிக்கி பாண்டிங்: ஸ்டீவ் வாக் எனும் மகத்தான கேப்டன் உருவாக்கிய மரபை சிதறாமல் இருமடங்கு அதிகப்படுத்திய இவர் ஆஸ்திரேலிய அணியை யாராலும் அவ்வளவு எளிதில் சாதிக்க முடியாத பாறையாக மாற்றி 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்தார்.

ponting-captaincy

பேட்டிங்கிலும் ஜாம்பவானாக செயல்பட்ட இவர் கேப்டனாக வெற்றி பெறுவதற்கு எதிரணியை ஸ்லெட்ஜிங் செய்வதற்கு கொஞ்சமும் தயங்காத குணத்தை கொண்டிருந்தார்.

- Advertisement -

2. சௌரவ் கங்குலி: ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததை போலவே கிரிக்கெட்டிலும் 1983 உலக கோப்பையை வென்ற போதிலும் பெரும்பாலும் எதிரணி மிரட்டினால் அப்படியே பயந்துபோய் கைக்கட்டும் அணியாக இருந்த இந்தியாவை மிரட்டலை கொடுக்கும் எதிரணியை மிரட்டும் அணியாக மாற்றிய பெருமை இவரைச் சேரும். மேலும் சச்சின் அடித்தால் மட்டும் வெல்லக்கூடிய அணியாக இருந்த இந்தியாவை சூதாட்ட புகாரிலிருந்து காப்பாற்றி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வெற்றி நடை போட வைத்த இவர் கேப்டனாக எதிரணிகளை தெறிக்கவிட்டார் என்றே கூறலாம்.

Ganguly

ரசல் அர்னால்ட், ஸ்டுவர்ட் ப்ராட் என தம்மிடமும் தமது அணி வீரர்களிடம் வம்பிழுத்த எதிரணி வீரர்களை வயாலும் பேட்டாலும் பதிலடி கொடுத்த இவர் மும்பையில் சட்டையை கழற்றி அவமானப்படுத்தி ஆண்ட்ரூ பிளின்டாப்புக்கு கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தனது சட்டையை கழற்றிக் கொடுத்த மாஸ் பதிலடியை யாராலும் மறுக்க முடியாது. அதைவிட ஆக்ரோஷமான கேப்டனாக கருதப்படும் ஸ்டீவ் வாக்’கை 2001 பார்டர் – கவாஸ்கர் தொடரில் டாஸ் வீசுவதற்கு காத்திருக்க வைத்து தோற்கடித்தது அவருடைய இரட்டை ஆக்ரோச குணத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

1. விராட் கோலி: இந்திய கிரிக்கெட்டில் அதிரடியும் ஆக்ரோசத்தையும் அறிமுகப்படுத்தியவர் கங்குலி என்றால் அதை முழுக்க முழுக்க கடைபிடிக்கும் ஒரே வீரர் விராட் கோலி எனலாம். கங்குலியாவது எப்போதாவதுதான் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். ஆனால் இவர் ஒவ்வொரு விக்கெட் விழுந்தாலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஆக்ரோசமாக கொண்டாடித் தீர்த்து விடுவார்.

Kohli-1

2014இல் கேப்டனாக பொறுப்பேற்ற போது சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்த இவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். ஜாம்பவான் பேட்ஸ்மேனாக செயல்படும் அவரது எனர்ஜியை பார்த்து இதர வீரர்கள் உற்சாகமடைந்து சிறப்பாக செயல்படும் அளவுக்கு கேப்டனாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அவர் மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் என வம்பிழுக்கும் யாராக இருந்தாலும் பதிலுக்கு சொல்லி அடிப்பவராக செயல்பட்டார்.

அவரால் உலக கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய அளவில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் எதிரணியினர் இந்திய வீரர்கள் வம்பிழுத்தால் நேராக சென்று பதிலடி கொடுக்கும் ஆக்ரோஷம் நிறைந்த கேப்டனாகவும் செயல்பட்டார்.

Advertisement