நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் மட்டும் பி.சி.சி.ஐ க்கு இத்தனை கோடி வருமானமா ? – மலைக்கவைக்கும் செய்தி இதோ

ipl trophy

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக 13வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தியாவில் 8 மைதானங்களில் நடத்தப்பட்ட 60 போட்டிகள் அங்கு வெறும் 3 மைதானத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே 60 போட்டிகளும் நடத்தி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

Rohith

இந்த வருட ஐபிஎல் தொடர் நடக்காது என்று ரசிகர்கள் யார் அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கையில் ஒருவழியாக பிசிசிஐ நடத்தி முடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. இந்தியாவில் இந்த ஐபிஎல் தொடர் நடத்தியிருந்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் லாபம் கிடைத்திருக்கும்.

அதே நேரத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறாமல் இருந்திருந்தால் குறைந்தது 4000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும். இதனை சரி கட்டுவதற்காக வெளிநாட்டில் நடத்தப்பட்டது இந்த ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு 60 போட்டிகளுக்கு மட்டும் 100 கோடி ரூபாயை பிசிசிஐ செலவு செய்திருக்கிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே உயிர் பாதுகாப்பு வளையத்திற்கு பத்து கோடி ரூபாயை செலவு செய்துள்ளது பிசிசிஐ.

mi

இறுதியாக இவை அனைத்தையும் செலவுசெய்து ஐபிஎல் தொடர் ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானங்களில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இதன் மூலம் பிசிசிஐ எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்ற தகவல் வெளிவந்திருக்கிறது. அதாவது இந்த வருடம் மட்டும் இந்த ஐபிஎல் தொடருக்கு மட்டும் 4000 கோடி ரூபாயை பிசிசிஐ வருவாயாக ஈட்டியுள்ளது. ரசிகர்கள் மைதானத்திற்கு செல்லவில்லை என்றாலும் அனைவரும் தொலைக்காட்சிகளிலும் ஆன்லைன் தளங்களிலும் தொடரைப் பார்க்க தொடங்கி விட்டனர்.

- Advertisement -

இதன்காரணமாக கடந்த ஆண்டை விட 25% பார்வையாளர்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளது. தொலைக்காட்சிகளிலும் ஆன்லைன் காலங்களிலும் பார்ப்பது அதிகரித்திருக்கிறது மேலும் வழக்கத்திற்கு மாறாக பிசிசிஐக்கு 20% லாபம் கிடைத்திருக்கிறது இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மகிழ்ச்சியில் இருக்கிறது.