இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் 2-1 என இந்திய அணியும் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வருகிற 17ம் தேதி அடிலெய்டில் மைதானத்தில் நடைபெறுகிறது. நாளை துவங்க உள்ள இந்த முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை காலை இந்திய நேரப்படி சுமார் (8:30) எட்டு முப்பது மணிக்கு துவங்கவுள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி தற்போது பி.சி.சி.ஐ யால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு எப்படி இருக்கும் பலரும் பல கருத்துக்களை கூறி வர தற்போது அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
நாளைய போட்டியில் விளையாட இருக்கும் 11 வீரர்களின் பெயர்களை தெளிவாக குறிப்பிட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரஹானே துணை கேப்டனாகவும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துவக்க ஜோடியாக அகர்வாலுடன், ப்ரித்வி ஷாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய மாற்றமாக இந்தப் போட்டியில் பண்ட் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்கெட் கீப்பராக சகாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
UPDATE🚨: Here’s #TeamIndia’s playing XI for the first Border-Gavaskar Test against Australia starting tomorrow in Adelaide. #AUSvIND pic.twitter.com/WbVRWrhqwi
— BCCI (@BCCI) December 16, 2020
அதே போன்று சமீபத்தில் தனது அட்டகாசமான பார்வை நிரூபித்த ராகுலுக்கும் இடம் கிடைக்காதது ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மீதமுள்ள 3 போட்டிகளில் இந்த அணி மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. மிடில் ஆர்டரில் புஜாரா, கோலி, ரஹானே, விஹாரி
பந்துவீச்சாளர்களாக அஸ்வின், பும்ரா, ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கான அணியில் ஜடேஜா, கில், ராகுல், சைனி, சிராஜ், பண்ட், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் வெளியில் அமரவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.