வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான அட்டவணை மற்றும் மைதானங்களை வெளியிட்ட பிசிசிஐ – முழு விவரம்

INDvsWI
- Advertisement -

தென்ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதில் கடந்த டிசம்பர் மாதம் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இழந்த இந்தியா உலகின் நம்பர்-1 டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை கோட்டை விட்டது. இதை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரில் தோல்வியை பரிசளித்த தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பை கோட்டை விட்டது.

kohli 1

நாடு திரும்பும் இந்தியா:
உலக தரம் வாய்ந்த வீரர்கள் இந்திய அணியில் இருந்த போதிலும் அனுபவமில்லாத தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இப்படி படுதோல்வியை சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியின் இந்த தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து நாளை இந்திய அணியினர் நாடு திரும்ப உள்ளனர். அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சொந்த மண்ணில் இந்தியா விளையாட உள்ளது.

- Advertisement -

மைதானங்கள் மாற்றம்:
இந்நிலையில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் துவங்க உள்ள இந்த கிரிக்கெட் தொடருக்கான மைதானங்களை பிசிசிஐ மாற்றியுள்ளது. அதில் முதலில் நடைபெறும் 3 போட்டிகள் ஒருநாள் தொடர் முழுவதும் குஜராத் மாநிலத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ind

அதேபோல வரும் பிப்ரவரி 16ஆம் தேதி துவங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முழுவதும் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

பழைய மைதானங்கள்:
இந்தியாவில் நிலவும் கரோனா பிரச்சனை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய 3 மைதானங்களில் நடைபெற இருந்தது.

motera

அதேபோல கட்டாக், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்த சுற்றுப்பயணம் முழுவதும் 6 மைதானங்களுக்கு பதிலாக அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய 2 மைதானங்களுக்கு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

முழு அட்டவணை :
இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு அட்டவணை இதோ:
முதல் ஒருநாள் போட்டி, பிப்ரவரி 6, மதியம் 1 மணி, அஹமதாபாத்.
2வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 9, மதியம் 1 மணி, அஹமதாபாத்.
3வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 11, மதியம் 1 மணி, அஹமதாபாத்
.

இதையும் படிங்க : கேமராவில் ரெக்கார்ட் ஆன வாமிகாவின் முகம். அனுஷ்கா ஷர்மாவின் ரியாக்ஷன் – ரசிகர்களுக்கு வேண்டுகோள்

முதல் டி20 போட்டி, பிப்ரவரி 16, இரவு 7 மணி, கொல்கத்தா.
2வது டி20 போட்டி, பிப்ரவரி 18, இரவு 7 மணி, கொல்கத்தா.
3வது டி20 போட்டி, பிப்ரவரி 20, இரவு 7 மணி, கொல்கத்தா.

Advertisement