கேமராவில் ரெக்கார்ட் ஆன வாமிகாவின் முகம். அனுஷ்கா ஷர்மாவின் ரியாக்ஷன் – ரசிகர்களுக்கு வேண்டுகோள்

vamika
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 287 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 283 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் சேஸிங்கின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி ராகுல் ஆட்டமிழந்த பிறகு களம் புகுந்தார்.

Vamika

- Advertisement -

தவானுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 84 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் அரைசதம் கடந்த விராட் கோலி தனது இந்த 64 ஆவது அரைசதத்தை கேலரியில் இருந்த தனது குழந்தைக்காக அர்ப்பணித்தார். இதுவரை சமூகவலைதளத்திலோ அல்லது எந்தவிதமான ஊடகத்திலோ வெளிவராத அவரது குழந்தையின் முகத்தை இந்தப் போட்டியின் போது கேமராமேன்கள் நேரலையில் காண்பித்தனர்.

இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த வாமிகாவின் புகைப்படமானது தற்போது விராட் கோலியின் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படி தங்களது மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதை கண்ட அனுஷ்கா ஷர்மா ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

stat

இப்படி ஒரு நிலையில் தங்கள் மகளின் முகத்தை கேமரா மேன் தான் காட்டிவிட்டார் என்றும் தன் மகளின் புகைப்படத்தை பகிர வேண்டாம் என்று அனுஷ்கா ஷர்மா அதிரடி அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் :

- Advertisement -

‘எங்கள் மகளின் புகைப்படங்கள் நேற்று ஸ்டேடியத்தில் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதை நாங்கள் அறிந்தோம். நாங்கள் இதற்கு தயாராகவில்லை என்பதையும், அங்கு கேமரா இருந்தது எங்களுக்கு தெரியாது என்பதையும் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது. நாங்கள் முன்பே குறிப்பிட்டதைப் போல வாமிகாவின் புகைப்படங்கள் க்ளிக் செய்யப்படாமல், பகிரப்படாமல் இருந்தால் மகிழ்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி இன்னும் 2 வருஷம் வெயிட் பண்ணியிருக்கலாம். அவசரப்பட்டுடாரு – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

ஏற்கனவே இந்திய அணியுடன் எங்கு பயணித்தாலும் தங்களது குழந்தையை யாரும் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க வேண்டாம் என்று அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கேட்டுக்கொண்டிருந்த வேளையில் தற்போது முதன்முறையாக வாமிகாவின் புகைப்படம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement