டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை வெளியிட்ட பி.சி.சி.ஐ

Jersey
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 14-வது ஐபிஎல் தொடரானது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் இன்று இரண்டாவது குவாலிபயர் போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியை சந்திக்கிறது.

அதன்பின்னர் இறுதிப் போட்டி முடிந்த சில தினங்களில் அங்கு ஏழாவது டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. அக்டோபர் 17-ஆம் தேதி துவங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்திய அணி தாங்கள் எதிர்கொள் முதல் போட்டியில் அக்டோபர் 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் ஜெர்சி நீல நிறமாக இருக்கும் என்பதன் காரணமாக தற்போது நீலநிறம் முழுமையாக பதிக்கப்பட்ட ஜெர்ஸியில் ஆரஞ்சு கலரில் வீரர்களின் பெயரும், இந்திய நாட்டின் பெயரும் குறிக்கப்பட்டுள்ளது.

அந்த புது ஜெர்சியை வெளியிட்ட பிசிசிஐ தற்போது அதனை புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் 15 வீரர்களும் மற்றும் மூன்று ரிசர்வ் வீரர்களும் அதுமட்டுமின்றி சில நெட் பவுலர்களும் இந்த தொடருக்கான அணியில் பங்கேற்று உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : மேலும் 2 வீரர்கள் அணியில் சேர்ப்பு – ஐ.பி.எல் தொடரால் அடித்த அதிர்ஷ்டம்

மேலும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், வழிகாட்டியாக மகேந்திர சிங் தோனியும் செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக முனைப்பு காட்டும் என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கும், கேப்டனாக கோலிக்கும் இதுவே கடைசி தொடர் என்பதனால் இந்த தொடரில் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement