டி20 உலககோப்பை : மேலும் 2 வீரர்கள் அணியில் சேர்ப்பு – ஐ.பி.எல் தொடரால் அடித்த அதிர்ஷ்டம்

Avesh
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. அதனை தொடர்ந்து அங்கு டி20 உலகக் கோப்பை தொடரானது அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான 16 அணிகளும் தற்போது இந்த உலக கோப்பையில் விளையாட தயாராக உள்ளன. ஏற்கனவே அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

IND

- Advertisement -

இந்த உலககோப்பை தொடருக்கான அணியில் 15 வீரர்கள் மற்றும் 3 ரிசர்வ் வீரர்கள் கொண்ட ஒரு கோர் டீமை இந்திய அணி அறிவித்திருந்த நிலையில் கடைசியாக சன்ரைஸ் அணியில் இடம்பெற்றிருந்த இளம்வீரரான உம்ரான் மாலிக்கை நெட் பவுலராக உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்தது.

இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 2 வீரர்களை கூடுதல் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக இந்திய அணி தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணியை சேர்ந்த ஆவேஷ் கானும், கொல்கத்தா அணியை சேர்ந்த வெங்கடேஷ் ஐயரும் இந்திய அணியில் நெட் பவுலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகும் அவர்கள் இருவரும் நாடு திரும்பக் கூடாது என்றும் இந்திய அணியுடன் இணைந்து இருக்க வேண்டும் எனவும் பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டுள்ளது.

avesh 1

venkatesh iyer

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் 15 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வெங்கடேச ஐயர் 8 ஆட்டங்களில் விளையாடி இரண்டு அரை சதத்துடன் 265 ரன்களை குவித்துள்ளார், அதுமட்டுமின்றி 3 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமே உங்களுக்கு ஏ.பி.டி வேணாம். இவங்க 3 பேரை மட்டும் தக்கவைங்க – கம்பீர் ஆலோசனை

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இருவருக்கும் கிடைத்த இந்த வாய்ப்புக்காக தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் ஹார்டிக் பாண்டியா ஒருவேளை இந்த உலக கோப்பை தொடரில் விளையாட முழு உடல் தகுதியுடன் இல்லையெனில் வெங்கடேஷ் ஐயர் அணிக்கு தேர்வாகவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement