இனி யாரும் சாக்கு போக்கு சொல்ல முடியாது.. இந்திய வீரர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்த – பி.சி.சி.ஐ

IND
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கடைசியாக நடைபெற்ற ஓவல் டெஸ்ட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இனி ஸ்டார் பிளேயர் அந்தஸ்து இல்லை : பி.சி.சி.ஐ கட்டுப்பாடு

இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இப்படி ஒரு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இங்கிலாந்து மண்ணில் சாதித்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் போது அனுபவ வீரர்கள் இல்லாமல் இருந்த வேளையில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரீத் பும்ராவும் பணிச்சுமையை காரணம் காட்டி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் அவர் அப்படி பணிச்சுமையை கணக்கில் காண்பித்து ஓய்வு எடுக்கக்கூடாது என்று பல பேச்சுக்கள் இருந்து வந்தன.

ஏனெனில் தற்போது இந்திய அணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதால் அனைவரும் விளையாட வேண்டியது அவசியம் என்ற ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்குள் இனி ஸ்டார் பிளேயர் கலாச்சாரம் கிடையாது என்றும் முக்கியமான போட்டிகள் அனைத்திலும் எந்த வீரராக இருந்தாலும் விளையாடியாக வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாட்டை பிசிசிஐ கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் வெளியான தகவலின் படி பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் : இந்திய அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள வீரர்கள் மூன்று வகையான போட்டிகளிலும் பங்கேற்றாலும் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். காயம் காரணமாக அவர்கள் அணியில் இருந்து வெளியேறலாமே தவிர மற்றபடி பணிச்சுமையை கணக்கில் காண்பித்து முக்கிய போட்டிகளில் அவர்கள் ஓய்வெடுக்க கூடாது.

இதையும் படிங்க : ரொம்ப ராசியான பையன்.. இந்திய அணியும் துருவ் ஜுரேலும்.. அரங்கேறிய தனித்துவமான சாதனை – விவரம் இதோ

முடிந்தளவு எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இனி அடிக்கடி ஓய்வு எடுக்கும் வீரர்களுக்கு மூன்று வகையான அணியில் இடம் கிடைக்காது என்றும் அப்படி மூன்று வகையான போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சரியான முறையில் மட்டுமே வாய்ப்புகளை வழங்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement