யு.ஏ.இ நாட்டில் நடைபெற்ற இந்த ஐ.பி.எல் தொடருக்கான செலவு எவ்வளவு தெரியமா ? – விவரம் இதோ

IPL-1

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் இந்த ஆண்டு 13 ஆவது சீசன் கொரோனா பாதிப்பினால் பலமுறை தள்ளி வைக்கப்பட்டு பின்னர் ஒரு கட்டத்தில் நடைபெறுமா ? நடைபெறாதா ? என்ற சந்தேகத்தில் இருந்தது. ஆனால் பிசிசிஐயின் சரியான திட்டம் மற்றும் நிர்வாகிகளின் சரியான வழிகாட்டுதலோடு இந்த நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கிறது.

Dubai

இந்த ஒட்டுமொத்த தொடரும் ஷார்ஜா, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய 3 மைதானங்களில் மட்டுமே நடைபெற்றன. மேலும் விளையாடும் அனைத்து அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் பயோபபுள் வளையம் ஏற்படுத்தி அவர்களுக்கான தங்கும் இடங்கள், பயிற்சி கூடங்கள், மைதானம் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் தற்போது இந்த தொடர் இவ்வளவு கட்டுப்பாடுகளையும் கொண்டு நடத்தப்பட்டதால் பி.சி.சி.ஐ இந்த தொடருக்காக செய்த் செலவுகள் எகிறி உள்ளதாக கணக்குகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த ஐபிஎல் தொடரை நடத்தியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் நிர்வாகத்திற்கு பிசிசிஐ சார்பாக 100 கோடி கட்டணம் செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் வழக்கமாக போட்டிகள் நடைபெறும் போது எட்டு மாநில அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானங்களை பயன்படுத்தி வந்தன.

Rohith

அதனால் போட்டி கட்டணமாக ஒவ்வோர் போட்டிக்கும் ஒரு கோடி ரூபாய் அந்தந்த மாநில நிர்வாகத்திற்க்கு அளிக்கப்படும். அதேபோன்று கேளிக்கை வரியும் தள்ளுபடி செய்து ஒரு போட்டிக்கு ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை மொத்த போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரக நிர்வாகம் நடத்தி கொடுத்துள்ளதால் 100 கோடி கட்டணம் செலுத்த பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

ipl trophy

இந்த 100 கோடி ரூபாயைத் தவிர வீரர்கள் அனைவரும் தங்குவதற்காக 14 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை மூன்று மாதத்திற்கு புக் செய்திருந்தது. இதன் மூலம் மேலும் பல கோடிகள் செலவாகி இருக்கின்றன. ரசிகர்கள் போட்டியை பார்க்க வில்லை என்றாலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு போதுமான வருமானம் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. பி.சி.சி.ஐ நிர்வாகத்திற்கு இந்த தொடரின் மூலம் எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்றாலும் லாபத்தின் விகிதம் குறைந்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.