
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் இந்திய வீரர்களுக்கு மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலை வீரர்களின் திறனுக்கு ஏற்ப வெளியிடும். அந்த வகையில் நடப்பு 2025-26 ஆண்டுக்கான சம்பள ஒப்பந்த ஊதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே இருந்த உயர்தரமான ஏ ப்ளஸ் பிரிவு இம்முறை நீக்கப்பட்டு ஏ, பி, சி ஆகிய மூன்று தரம் மட்டுமே இருக்கும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வெளியான இந்த சம்பள ஒப்பந்த பட்டியலில் ஏ பிரிவில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அனுபவ ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்களை தவிர்த்து வேறு யாருக்கும் இந்த பிரிவில் இடம் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஏ ப்ளஸ் கிரேடில் இருந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தற்போது பி பிரிவிற்கு தரம் இறக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் இருவருமே டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றதால் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. அதனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர்கள் தரமிறக்கப்பட்டுள்னர்.
அதோடு அவர்களுடன் பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், கே.எல் ராகுல், முகமது சிராஜ், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோன்று சி பிரிவில் : திலக் வர்மா, அக்சர் பட்டேல், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜுரேல், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, நிதீஷ் குமார் ரெட்டி.
இதையும் படிங்க : கவுதம் கம்பீர் வைத்த விருந்துக்கு வந்த அபிஷேக் சர்மா பாதியிலேயே வெளியேற்றம் – என்ன நடந்தது?
அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இப்படி மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் இருந்தாலும் கடந்த 2023-24 சீசனில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன் தற்போது மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வரும் வேளையில் அவருக்கு இந்த ஆண்டு ஊதிய ஒப்பந்த பட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.