இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்து வைத்த நிகழ்வு பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்க்கும் விடயமாக இருந்து வருகிறது. நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் அமெரிக்கா அணியை வீழ்த்தி அசத்தியது. அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் நமீபியா அணியை எதிர்த்து டிசம்பர் 12-ம் தேதி விளையாட இருக்கிறது.
விருந்தில் இருந்து பாதியில் வெளியேறிய அபிஷேக் சர்மா :
இதன் காரணமாக தற்போது டெல்லி சென்றடைந்த வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கௌதம் கம்பீர் இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் ஒரு சிறப்பு விருந்தினை ஏற்பாடு செய்து அளித்திருந்தார். அதில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி சக ஊழியர்கள், நிர்வாக உதவியாளர்கள் என அனைவருமே பங்கேற்றனர். பிறகு நீண்ட நேரம் கழித்து விருந்து முடிந்ததும் அனைவரும் மீண்டும் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றனர்.
இந்நிலையில் இந்த விருந்துக்கு வந்த இந்திய வீரர்களில் அபிஷேக் ஷர்மா மட்டும் வீரர்களுடன் பேருந்தில் திரும்பாமல் விருந்துக்கு வந்த சில மணி நேரங்களிலேயே தனது பேக் உடன் வேறு ஒரு காரில் ஏறி ஹோட்டலுக்கு திரும்பினார். இப்படி அபிஷேக் ஷர்மா பாதியிலேயே விருந்திலிருந்து வெளியேற என்ன காரணம்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே அமெரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் அபிஷேக் சார்மாவுக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது டெல்லியில் உள்ள வானிலை மாற்றம் காரணமாக அபிஷேக் சர்மா சற்று உடல்நிலை சீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் வேளையில் அதன் காரணமாகவே அவர் விரைவாக ஹோட்டலிற்கு சென்றார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய அணியில் ஒருத்தரை கூட விட்டுவைக்காமல் கம்பீர் வைத்த விருந்து – விவரம் இதோ
மேலும் அடுத்த போட்டிக்குள் தான் முழு உடற்தகுதி எட்ட வேண்டும் என்பதற்காகவே சரியான ஓய்வில் இருக்க அவர் முன்கூட்டியே கௌதம் கம்பீர் வீட்டில் இருந்து வெளியேறினார் என்று தெரிகிறது. மற்றபடி கம்பீருக்கும் அவருக்கும் எந்த ஒரு பிரச்சனையோ இல்லை என்பது உறுதியாகி உள்ளது.



