சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணி தங்களது முதலாவது ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடியது. அந்த போட்டியில் ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது அமெரிக்க அணியை வீழ்த்தி அசத்தியது.
இந்திய வீரர்களுக்கு விருந்து வைத்த கவுதம் கம்பீர் :
அதனை தொடர்ந்து இந்த லீக் சுற்று போட்டிகளில் தங்களது இரண்டாவது ஆட்டமாக நமீபியா அணிக்கு எதிராக வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி டெல்லி நகரில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய வீரர்கள் டெல்லி சென்றடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காயம் காரணமாக முதல் போட்டியின் போது அணியில் இணையாமல் இருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் தற்போது டெல்லி சென்றடைந்து இந்திய வீரர்களுடன் இணைந்து விட்டார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் டெல்லி வந்த இந்திய வீரர்களுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் அளித்த விருந்து குறித்து தற்போது பலரும் பேசி வருகின்றனர்.
ஏனெனில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீரின் சொந்த மாநிலம் டெல்லி என்பதனால் அங்கு வந்த இந்திய வீரர்களை அவர் தனது வீட்டிற்கு சிறப்பு விருந்துக்காக நேரில் அழைத்துள்ளார். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஊழியர்கள், நிர்வாக உதவியாளர்கள் என ஒருத்தரையும் விடாமல் அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்து அவர் விருந்து வைத்துள்ளார். அதுகுறித்த சில புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க : இந்தியாவுடன் நாங்க ஆடனும்னா இந்த 3 விடயத்தையும் பண்ணுங்க.. ஐ.சி.சி-யிடம் – பாகிஸ்தான் கோரிக்கை
ராகுல் டிராவிடுக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற அவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து கோப்பைகளை வென்றிருந்த வேளையில் இந்த டி20 உலக கோப்பையும் இந்திய அணி வெல்லும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



