- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முன்பு ஹார்டிக் பாண்டியா.. இப்போ ஜஸ்ப்ரீத் பும்ரா.. தொடரும் ஏமாற்றம் – இந்திய அணியில் என்னதான் நடக்குது?

இந்திய அணி கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கூட்டாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அதன் காரணமாக அனுபவ வீரர்கள் வசம் இருந்த டி20 போட்டிகள் இளம் வீரர்கள் கைக்கு சென்றது.

அப்போ பாண்டியா.. இப்போ பும்ரா..

அப்படி ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஹார்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற பேச்சு அதிகளவில் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் வித்தியாசமான முடிவை எடுத்த பிசிசிஐ இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமித்தது.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் காரணமாக போட்டியை தவற விடக்கூடியவர் என்பதனால் அவரது உடற்தகுதியை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா எவ்வாறு டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து ஒதுக்கப்பட்டாரோ அதேபோன்று பும்ராவிற்கும் ஒரு சூழல் நடைபெற உள்ளது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததால் துணை கேப்டனான ஜஸ்ப்ரீத் பும்ரா தான் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பலராலும் பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் பிசிசிஐ எடுத்துள்ள முடிவில் பும்ராவை தாண்டி இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு தான் அடுத்த கேப்டன்சி என்று முடிவு செய்துள்ளது. மேலும் பும்ராவிற்கும் பணிச்சுமை காரணமாக அடிக்கடி ஓய்வு கொடுக்கப்படும் என்பதனாலே இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஸ்லோவா ஸ்டார்ட் பண்ணாலும் இப்போ அவங்க வேறலெவல்.. மும்பை இந்தியன்ஸை புகழ்ந்த – சஞ்சய் மஞ்சரேக்கர்

இப்படி டி20 கிரிக்கெட்டில் பாண்டியாவிற்கும், டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவிற்கும் கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்படாததற்கு முக்கிய காரணமே அஜித் அகார்கர் என்றும் அவர் எடுக்கும் இது போன்ற தனிப்பட்ட முடிவுகளால் தான் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -