ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பிறகு ஐ.பி.எல் நடைபெறுமா ? பி.சி.சி.ஐ வெளியிட்ட புதுத்தகவல் – அதிகாரபூர்வ அறிவிப்பு

IPL-1
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஆனது உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவை மட்டுமின்றி அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளை பதம் பார்த்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது. இந்தியாவில் தற்போது வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு அதிரடியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அதன்படி கடந்த மாதத்தில் இருந்தே எந்த ஒரு பொது நிகழ்ச்சிகள், அரசாங்க நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என எதுவுமே இந்தியாவில் நடைபெறவில்லை.

மேலும் இதன் காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் தள்ளி போய் உள்ளது. ஏற்கனவே மார்ச் 29ஆம் தேதி துவங்கி மே 4 ஆம் தேதி முடிவடையும் என்று அட்டவணை தொகுக்கப்பட்ட ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

CskvsMi

இந்த போட்டிகளை காண மைதானங்களில் 50 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள் என்றும் அதனால் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த தொடர் தற்போதைய சூழலில் நடைபெற வேண்டாம் என்று தள்ளிவைக்கப்பட்டது. மேலும் தற்போது ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு இந்த தொடரின் நிலை குறித்து தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகும் ஒத்தி வைப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று அறிவித்துள்ளது. இதனால் இந்த தொடர் அடுத்த தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

csk-vs-mi

ஒத்திவைப்பது குறித்து யோசிக்கவில்லை என்றால் ரத்து செய்யவே அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஏப்ரல் 15 க்கு பிறகு போட்டிகளில் எண்ணிக்கை குறைத்து ஐபிஎல் துவங்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது உள்ள வெளியான செய்தி மிக அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement