இந்த வருஷம் ஐ.பி.எல் தொடரை நடத்த வாய்ப்பே இல்ல போல. பி.சி.சி.ஐ எடுத்துள்ள புது முடிவால் – ரசிகர்கள் அதிர்ச்சி

IPL-1

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி முதல் 14வது ஐபிஎல் சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கும் கொரோனா பரவல் தொடங்கியதை அடுத்து இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தொடரானது அடுத்த அறிவிப்பு வரும்வரை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL

இந்நிலையில் இந்த தொடரை மீண்டும் நடத்த வாய்ப்பில்லை என்பது போன்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில் பிசிசிஐ தற்காலிகமாக இந்த தொடரை நிறுத்தி இருந்தாலும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்தால் இந்த தொடர் தற்போதைக்கு நடைபெற சாத்தியமே இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் பிசிசிஐ இந்த தொடரை ஒத்திவைத்த முடிவை எடுத்த பின்னர் அவர்கள் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களை சொந்த ஊருக்கு அனுப்ப திட்டமிட்டு வருகிறது.

மேலும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள வீரர்களை பாதுகாப்பாக வழியனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக வெளிநாட்டில் இருந்து இங்கு வந்துள்ள வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் போதிய போக்குவரத்து ஏற்பாடுகளை செய்யப்போவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் இந்த முடிவால் இந்த தொடர் தற்போது நடைபெறாது என்று உறுதியாகியுள்ளது.

அதனால் அடுத்த 2 மாதங்களுக்கு இந்த தொடர் நடைபெற வாய்ப்பே இல்லை. அதன்பின்னர் உலகக் கோப்பை டி20 தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் போன்ற பல தொடர்கள் அடுத்தடுத்து வர உள்ளதால் இந்த ஆண்டு இறுதிவரை இந்த தொடரை நடத்த வாய்ப்பே இல்லை என்று கூறலாம். மேலும் இரண்டு மூன்று மாதங்கள் ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போனால் அதன் பிறகு அனைத்து அணிகளுக்கும் மற்ற அணிகளுடன் போட்டி இருக்கும். அதே போன்று இந்திய அணிக்கும் போட்டிகள் தொடர்ந்து இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஐ.பி.எல் தொடரை திட்டமிட்டு நடத்துவது கஷ்டம் என்று தெரிகிறது.

- Advertisement -

dc

அதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் முழுவதுமாக கைவிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது மேலும் வெளிநாட்டு வீரர்கள் அவர்களது நாட்டிற்கு சென்றால் மீண்டும் திரும்பி இந்தியா வருவது கஷ்டம் இதன் காரணமாக இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.