இந்த 2 மாநிலங்களில் மட்டுமே இந்தாண்டு ஐ.பி.எல் சீசன் முழுவதும் நடைபெறும் – பி.சி.சி.ஐ முடிவு

IPL-1

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டாக நடத்தப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் ஆரவராத்துடன் நடத்தப்படும் இந்த தொடர், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த வருடம் மட்டும் சத்தமில்லாமல் நடத்தி முடிக்கப்பட்டது.

ipl trophy

இந்த இந்த வருடதிற்கான ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருக்கிறது.இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் எல்லா வருடமும் போல் எட்டு மாநிலங்களில் நடைபெறாமல் மும்பை மற்றும் அகமதாபாத்தில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லீக் ஆட்டங்கள் மும்பையிலும் பின்பு பிளே ஆஃப் சுற்றுகள் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த உள்ளது பிசிசிஐ. இந்தியாவில் கொரோனா இன்னும் முழுமையாக குறையாத நிலையில் பயோ பப்புளில் வீரர்களை ஒரே மாநிலத்தில் தங்கவைத்து ஐபில் தொடரை நடத்த இருக்கிறது.அந்த மாநிலம் மும்பையாகவே பெரும்பாலும் இருக்க வாய்ப்பு உள்ளது.

Ground

ஏனெனில் அங்குதான் நான்கு ஸ்டேடியங்கள் ( வான்கடே , டி ஒய் பட்டீல் , பிரப்போர்ன் மற்றும் ரிலையன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் ) உள்ளன. எனவே லீக் ஆட்டங்களை மும்பையில் வைத்த முடித்து விட்டு பின்பு பிளே ஆஃப் சுற்றுகளை அகமதாபாத்தில் புதிதாய் திறக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்தவும் பிசசிஐ திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

Motera-1

வீரர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டே இந்த முடிவை பிசிசிஐ எடுத்திருக்க வேண்டும் என்று ரசிசர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எதும அறிவிக்கவில்லை.ஒரு பக்கம் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.