வங்கதேச ஒருநாள் தொடர் இல்லனா என்ன? புதிய தொடரை ஏற்பாடு செய்யவுள்ள பி.சி.சி.ஐ – விவரம் இதோ

BCCI IND
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது அடுத்த மாதம் வங்கதேச நாட்டில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வங்கதேச நாட்டில் நடைபெற்று வரும் சூழ்நிலை மற்றும் இந்தியா பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையேயான தற்போதைய சூழல் என பல விடயங்களை கணக்கில் கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான தொடரை ஓராண்டு தள்ளி வைப்பதாக ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்துவிட்டது.

இந்திய அணிக்காக ஏற்பாடு செய்யப்படவுள்ள புதிய தொடர் :

இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மீண்டும் நாடு திரும்பிய பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

- Advertisement -

அதே வேளையில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி அந்த தொடரில் பங்கேற்காத வேளையில் மற்றொரு மாற்று ஏற்பாடாக ஒரு முக்கிய முடிவை பி.சி.சி.ஐ கையில் எடுத்துள்ளது. அதாவது வழக்கமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை நாட்டில் லங்கா பிரீமியர் லீக் நடைபெறு வருவது வழக்கம். இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுவது போன்று அங்கு லங்கா பிரீமியர் லீக் நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு அந்த தொடரானது தள்ளி வைக்கப்பட்டுள்ள வேளையில் இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரை நடத்த பி.சி.சி.ஐ முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கிரிக்கெட் நிர்வாகிகளும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த பேச்சு வார்த்தையில் இரு நாட்டு நிர்வாகமும் சம்மதிக்கும் பட்சத்தில் இந்திய அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆகஸ்ட் மாதம் விளையாடும் என்று தெரிகிறது. இதுகுறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 6 சிக்ஸ் அடிச்சா போதும்.. சேவாக்கையே பின்னுக்கு தள்ள காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

ஆனால் இன்னும் சில தினங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இலங்கை அணி அடுத்ததாக ஆகஸ்ட் 29ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. அதற்கு முன்பாகவே இந்த ஆறு போட்டிகளையும் நடத்தி முடிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement