இந்தியாவில் டி0 உலகக்கோப்பை நடக்கவில்லை என்றால் இந்த நாட்டில் நடைபெறும் – பி.சி.சி.ஐ எடுத்துள்ள புதிய முடிவு

BCCI

ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் பாதுகாப்பான முறையில் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி இந்த தொடரை சீண்டி பார்த்துள்ளது. இந்தாண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆண்களுக்கான டி20 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி உத்தரவாதம் இட்டிருந்தது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக கொரோனா தீவிரம் கண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக ஆட்டிப் படைக்கிறது என்றே நாம் கூறலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சத்து 90 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை யும் ஒரு நாளுக்கு 3500ஐ தொட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் திட்டமிட்டபடி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

16 நாடுகள் கலந்து கொண்டு நடைபெறவுள்ள இந்த பிரமாண்ட தொடர் மிகப் பாதுகாப்பாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும். பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடும் நேரத்தில் அவர்களது பாதுகாப்பு மிக மிக அவசியம். எனவே தற்பொழுது இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுமா அல்லது தொடர் வேறு எங்காவது நடைபெறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

motera

இந்தியாவில் தற்பொழுது கொரோனா எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவது உண்மைதான். இந்தியாவில் உலக கோப்பை டி20 தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என தற்போது வரை நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா பழையபடி சீராக செயல்படத் தொடங்கும் என நம்புகிறோம். எனவே இப்பொழுது எங்களால் இந்தியாவில் நடைபெறுமா ?நடைபெறாதா ? என்று உறுதியாகக் கூறிவிட முடியாது.

- Advertisement -

நிலைமை மோசமாக போகும் பட்சத்தில், இந்தியாவில் நடைபெறவே முடியாமல் போகும் சூழ்நிலையில் நிச்சயமாக ஐசிசி’யுடன் கலந்து ஆலோசித்து தொடரை வேறு எங்காவது நடத்த திட்டமிடுவோம் என்று பிசிசிஐ ஜெனரல் மேனேஜர் திராஜ் மல்ஹோத்ரா கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஒரு வேளை உலக கோப்பை டி20 தொடர் நடைபெறவில்லை என்றால் கண்டிப்பாக அது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்கிற செய்து தெரியவந்துள்ளது.
Dubai

சென்ற ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற முடியாமல் போன நிலையில், பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக ஐபிஎல் தொடரை சென்ற ஆண்டு நடத்தி முடித்தது அனைவருக்கும் தெரியும். எனவே இந்த ஆண்டு இறுதியில் உலக கோப்பை டி20 தொடர் ஒருவேளை இந்தியாவில் நடைபெற முடியாமல் போனால் நிச்சயமாக உலக கோப்பை டி20 தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெறும் என்று நாம் உறுதியாக நம்பலாம். ஆனால் அதற்கு இன்னும் அவகாசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.