இந்தியாவில் 700 கோடி செலவில் பிரமாண்ட மைதானம். முதல் போட்டி அதைவிட பிரமாண்டம் – கங்குலி மாஸ்டர் பிளான்

Motera-1
- Advertisement -

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானம் அகமதாபாத் மெட்ரோ பகுதியில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டமைப்பு பணிகள் ஏறக்குறைய தற்போது முடியும் தருவாயில் உள்ளதால் இந்த மைதானம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.

motera

- Advertisement -

இந்நிலையில் இந்த மைதானத்தில் நடக்கவிருக்கும் முதல் போட்டியை பிரம்மாண்டமாக நடத்த கங்குலி தலைமையிலான பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பெரிய மைதானத்தில் நடக்க இருக்கும் முதல் போட்டியே மிகப்பெரிய போட்டியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள கங்குலி உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையேயான போட்டியை இந்த மைதானத்தில் முதல் போட்டியாக நடத்த ஐ.சி.சி யிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.சி.சி கங்குலியின் கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இந்த மைதானத்தில் திட்டமிட்டபடி அந்த போட்டி நடைபெறும். கிரிக்கெட் உலகில் தற்போது கட்டப்பட்டு உள்ள மிகப்பெரிய மைதானமாக அகமதாபாத் மைதானம் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் உலகின் பெரிய மைதானமாக இருந்தது மொத்தம் 90 ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்க கூடிய வகையில் மெல்போர்ன் மைதானம் இருந்தது.

asia-xi-vs-world-xi

அதனை தாண்டி தற்போது அதை முறியடிக்கும் விதமாக இந்த அகமதாபாத் மைதானத்தில் 1,10,000 (ஒரு லட்சத்தி பத்தாயிரம்) மக்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 63 ஏக்கர் பரப்பளவில் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த மைதானம் கட்டப்பட்டு வந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பிரம்மாண்ட மைதானத்தில் பிரமாண்ட போட்டியை நடத்துவது குறித்து வைத்துள்ள கங்குலியின் திட்டம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement