பிசிசிஐ புதிய பிளான் – 2021ல் கடுப்பேற்றிய துபாய் பிட்ச்கள் ! 2022-இல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க பிளான் ரெடி

IPL-1
- Advertisement -

ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் நடைபெற உள்ளது. இம்முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு விருந்து த்ரில் படைக்க தயாராகி வருகிறது.

IPL 2022

- Advertisement -

இம்முறை இந்தியாவிலேயே நடைபெற உள்ள இந்த தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கடுப்பேற்றிய துபாய் பிட்ச்கள்:
பொதுவாக ஐபிஎல் தொடர் என்பது அதில் அடிக்கப்படும் அதிரடியான பவுண்டரிகள் மற்றும் இமாலய சிக்ஸர்கள் போன்றவைகளால் தான் இந்த அளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளது. அதற்கு ஏற்றார்போல் இந்த தொடரில் பவுலர்களை பந்தாடி ரன் மழை பொழியும் பேட்ஸ்மேன்கள் மைதானத்திற்கு நேரடியாக போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பது வழக்கமான ஒன்றாகும்.

IPL

அதே சமயம் தொலைக்காட்சியின் வாயிலாக இந்த தொடரை உலகம் முழுவதிலும் பார்க்கும் பல கோடி ரசிகர்களும் அதிரடி மிகுந்த விறுவிறுப்பான பரபரப்பான ஐபிஎல் போட்டிகளைத் தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு கடந்த சில வருடங்களாக மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது என்று கூறலாம். ஏனெனில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதலில் இந்தியாவில் நடந்த இந்த ஐபிஎல் தொடர் 29 போட்டிகளுக்கு பின் துபாயில் நடைபெற்றது.

- Advertisement -

அந்த வகையில் ரசிகர்கள் அனுமதியின்றி இந்தியாவில் உள்ள சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா 4 நகரங்களில் உள்ள மைதானத்தில் மட்டும் கடந்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் பகுதி நடைபெற்றது. ஆனால் அந்த போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க திண்டாடினார்கள். குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 20 ஓவர்களில் 140 ரன்களை எடுப்பதற்குள் அனைத்து அணிகளும் படாதபாடு பட்டு விட்டன. இதனால் ஐபிஎல் தொடரில் டெஸ்ட் போட்டியை பார்க்க வேண்டியுள்ளது என சலித்துக் கொண்ட ரசிகர்கள் டிவியை ஆஃப் செய்தார்கள் என்றே கூறலாம்.

அதன்பின் துபாய்க்கு மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎல் தொடரில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதைவிட மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. ஏனெனில் அங்கு துபாய் மைதானத்தை தவிர அபுதாபி, சார்ஜா ஆகிய மைதானங்களில் நடந்த போட்டிகள் மீண்டும் பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் பெரிய அளவில் ரன் மழை பொழிய முடியவில்லை. அத்துடன் துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகள் சேசிங் செய்து வெற்றிபெற்றன. இதனால் டாஸ் வென்று சேசிங் செய்தால் வெற்றி உறுதி என்ற நிலைமை ஏற்பட்டதால் மீண்டும் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டியது. அத்துடன் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பெயர் பெற்ற ஐபிஎல் தொடரில் பேட் – பந்து ஆகியவற்றிற்கு இடையே சமமான போட்டி நிலவாத காரணத்தால் பெரும்பாலான போட்டிகள் ரசிகர்களுக்கு கலைப்பை உண்டாக்கின.

- Advertisement -

பிசிசிஐ புதிய பிளான்:
இந்நிலையில் கடந்த வருடம் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு இந்த வருடம் த்ரில் விருந்து படைக்க புதிதாக ஒரு திட்டத்தை பிசிசிஐ செயல்படுத்த உள்ளது. அதாவது இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயே நடந்தாலும் மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில், ப்ராபோர்ன், எம்சிஏ ஆகிய 4 மைதானங்களில் மட்டும் நடைபெற உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இந்த 4 மைதானங்களிலும் பேட்டிங் – பவுலிங் ஆகிய இரண்டுமே சம அளவில் எடுபடும் அளவுக்கு தரமான பிட்ச்களை தயாரிக்க அந்தந்த மைதானத்திற்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

Lucknow-stadium

மேலும் 4 மைதானங்களில் அடுத்தடுத்து போட்டி நடைபெற உள்ளதால் ஒரு போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச்க்கு ஒரு வாரம் ஓய்வு அளிக்கும் வகையில் ஒரே மைதானத்தில் 5 வெவ்வேறு பிட்ச்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி மும்பையில் உள்ள 3 மைதானங்களின் மேற்பார்வையாளர் நதீம் மேமன் கூறியது பின்வருமாறு. “ஒவ்வொரு மைதானத்திலும் 5 பிட்ச்கள் இருக்கும்.

- Advertisement -

இதனால் ஒவ்வொரு பிட்ச்களும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். அதாவது ஒரு போட்டி முடிந்த பின் அந்த பிட்ச்க்கு ஒரு வாரம் ஓய்வு கிடைக்கும் என்பதால் தண்ணீர் விட்டு உருளை போட்டு அடுத்த போட்டிக்கு முன்பாக தரமான பிட்ச்சை உருவாக்க முடியும். இப்போது ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதி வரும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் பிட்ச்கள் பிளாட்டாக உள்ளன.

இதையும் படிங்க : டக் நாயகன்கள் : ரோஹித் முதல் ஏபிடி வரை – ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் – லிஸ்ட் இதோ

ஆனால் மும்பையின் பிட்ச்கள் அற்புதமான போட்டியை வெளிப்படுத்தும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 10 போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினோம். அதேபோல் இந்த முறையும் நடத்த உள்ளோம்” என கூறினார். மொத்தத்தில் ரசிகர்களுக்காக தரமான போட்டிகளை விருந்து படைக்க மெனக்கெடும் பிசிசிஐயின் புதிய திட்டம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement