என்ன நடக்கிறது ? அப்பாடா இறுதியில் உண்மையை ஒத்துக்கொண்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ

BCCI

இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21ம்தேதி தங்களது ஒட்டுமொத்த அணியுடனும் துபாய் சென்றது. ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சியை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தில் 13 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் யார் யார் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

அதன்படி சென்னை அணியின் பந்து வீச்சாளரான தீபக் சாஹர் மற்றும் பேட்ஸ்மேன் ருதுராஜ் கைக்வாடு ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 11 சிஎஸ்கே நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

கடந்த பல செய்திகளில் பிசிசிஐ சிஎஸ்கே நிர்வாகத்தின் இந்த செய்தியை உறுதி செய்யாத நிலையில் தற்போது இந்த செய்தி உண்மைதான் என்று இறுதியில் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்க இருந்த இந்தத் தொடரில் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ruthraj

மேலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம் செய்துவரும் பிசிசிஐ ஐபிஎல் ஊழியர்கள், பிசிசிஐ ஊழியர்கள் மற்றும் பிசிசிஐயின் நிர்வாக ஊழியர்கள், துணை பணியாளர்கள் என 1988 பேருக்கு 20 முதல் 28ம் தேதி வரை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு இதில் தற்போது வரை 13 பேருக்கு உறுதியாகி உள்ளது என்றும் கூறியுள்ளது.

- Advertisement -

csk

மேலும் கொரோனா பாதித்த சி.எஸ்.கே வீரர்கள் யாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததார்கள் என்பதை கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்தி ஐபிஎல் மருத்துவ குழு கண்காணித்து வருகிறது என்றும் அதிராகபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.