ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக விராட் கோலி கோரிக்கை வைத்தாரா ? – பி.சி.சி.ஐ விளக்கம்

Kohli-1
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோலி அடுத்ததாக ஒருநாள் தொடருக்கான அணியிலும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராத் கோலிக்கு விளையாடுவதில் விருப்பம் இல்லை என்றும் அவரது மகளின் பிறந்தநாள் ஜனவரி முதல் வாரத்தில் வருவதனால் அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dekock

இந்நிலையில் விராட் கோலி முன்வைத்த இந்த கோரிக்கை உண்மைதானா என்பது குறித்த தகவலை தற்போது பி.சி.சி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி விராட் கோலியிடம் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகத்திற்கு எந்த ஒரு கோரிக்கையையும் வரவில்லை. மேலும் விராட் கோலி இதுகுறித்து சௌரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகிய இருவரிடமும் கூட எதுவும் சொல்லவில்லை எனவே நிச்சயம் திட்டமிட்டபடி கோலி ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் விராட் கோலி ஒருவேளை இந்த தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் பயோ பபுளில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் செய்ய முன்கூட்டியே அறிவித்திருருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை அப்படி எதுவும் கூறவில்லை அதனால் திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 19, 21, 23 ஆகிய மூன்று தேதிகளிலும் அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Dravid

அதோடு இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு அவர் தனது குடும்பத்துடன் பயணிக்க உள்ளதால் எந்தவித பிரச்சனையுமின்றி ஒருநாள் தொடரில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக விராட் கோலி ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வினை கேட்டு கோரிக்கையை முன்வைத்தார் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் ஒரு வதந்தி தான் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : யார் இந்த பிரியங்க் பன்சால்? ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்க – என்ன காரணம்?

மேலும் தென்னாப்பிரிக்கா தொடரை தொடர்ந்து அடுத்ததாக ஸ்ரீலங்கா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாடுகிறது. இதன் காரணமாக இந்திய அணி தொடர்ச்சியான பயோ பபுளில் இருக்கும் என்றும் அதற்காக முக்கிய வீரர்கள் அனைவரும் அணியில் இணைந்து இருப்பார்கள் என்றும் பிசிசிஐ சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement