இங்கிலாந்தில் ஐ.பி.எல் தொடர் நடக்கவே நடக்காது. எஞ்சியுள்ள போட்டிகள் இந்த நாட்டில் தான் நடைபெறும் – வெளியான தகவல்

IPL-1

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது 29 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இம்மாதத் துவக்கத்தில் ஒத்திவைக்கப்பட்டது. வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இந்த தொடரை காலவரையின்றி ஒத்தி வைத்த பிசிசிஐ தற்போது எஞ்சியுள்ள போட்டிகளை செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் வெளிநாடுகளில் நடத்தலாம் என்று முடிவு செய்து வருகிறது.

IPL

மேலும் இந்த ஆண்டு இறுதி வரை இந்தியாவில் ஐபிஎல் நடத்த வாய்ப்பில்லை என்று ஏற்கனவே பிசிசிஐயின் தலைவராக கங்குலி தெளிவாக கூறி இருந்ததால் இந்த தொடரானது இங்கிலாந்து, இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளதால் அங்கு ஐபிஎல் தொடரை நடத்துவதே சரியானதாக இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர். அதேபோன்று இந்த ஐபிஎல் தொடரை இங்கிலாந்தில் நடத்துவதற்காக டெஸ்ட் அட்டவணையில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டும் என பிசிசிஐ கேட்டுக்கொண்டதாக சில தகவல்களும் வெளியாகின.

ஆனால் அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் இந்த ஐ.பி.எல் தொடர் இங்கிலாந்தில் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் கூறுகையில் : இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. எனவே இந்த தொடர் நடைபெறுவதில் எந்தவித மாற்றமும் இருக்காது.

- Advertisement -

Dubai

இந்த டெஸ்ட் தொடரானது ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த நாட்களில் நடைபெறும். இந்தியாவின் நிலைமை சீரடைந்தால் 14வது ஐ.பி.எல் சீசன் இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் நடக்கும் அப்படி இல்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடக்கும் என்று அவர் உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement