ஐ.பி.எல் 2021 : எஞ்சியுள்ள 31 போட்டிகள் நடைபெறும் தேதிகள் இவைதான் – உறுதி செய்த பி.சி.சி.ஐ அதிகாரி

IPL-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் கடந்த மாதம் இறுதியில் பிசிசிஐ நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் எஞ்சியுள்ள 31 போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டது.

IPL

மேலும் இந்த தொடர் நடைபெறும் தேதிகள் திட்டமிடப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஐபிஎல் துவங்கும் தேதி மற்றும் முடியும் தேதி ஆகிய முக்கிய தகவலை பிசிசிஐ நிர்வாக அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் உடன் கலந்து ஆலோசித்து ஐபிஎல் தொடர் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானத்தில் எஞ்சியுள்ள போட்டிகள் நடைபெறும் இந்தப் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

MIvsDC

அக்டோபர் 15ஆம் தேதி இந்தியாவில் தசரா திருவிழா துவங்குவதால் அந்தநாளில் இந்த தொடரின் இறுதிப் போட்டியை நடத்த உள்ளதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த 25 நாட்கள் இடைவெளியில் அனைத்து போட்டியிலும் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.

Dubai

வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு சூழ்நிலையைப் பொருத்து தான் அமையும் என்றும் பெரும்பாலான வீரர்கள் நிச்சயம் இந்த தொடரில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த தொடரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரசிகர்கள் 50 சதவீதம் பேர் ரசிகர்களாக போட்டியை நேரடியாக மைதானத்தில் கண்டுகளிக்கலாம் என்றும் தெரிகிறது.

Advertisement