கேல் ரத்னா விருதுக்கு 2 கிரிக்கெட் வீரர்களை பரிந்துரை செய்த பி.சி.சி.ஐ – அதுல ஒருத்தர் தமிழக வீரர்

BCCI
- Advertisement -

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வினின் பெயரையும், மகளிர் அணியில் இருந்து மித்தாலி ராஜின் பெயரையும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அர்ஜூனா மற்றும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது விளையாட்டுத்துறை அமைச்சகம். அதன்படி ஒவ்வொரு விளையாட்டு நிர்வாகமும், அவர்களுடைய விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களின் பெயர்களை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும்.

- Advertisement -

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் சார்பாக தமிழக வீரரான அஷ்வினும், மகளிர் அணியின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக இருக்கும் மிதாலி ராஜின் பெயரையும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது. இந்திய அணியின் மற்ற வீரர்களான ஷிகர் தவான், கே எல் ராகுல் மற்றும் ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோரின் பெயகள் அர்ஜுனா விருதுக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில் ஷிகர் தவானின் பெயர் சென்ற ஆண்டே அர்ஜுனா விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த ஆண்டிலும் அவரின் பெயரை அனுப்பியுள்ளது பிசிசிஐ. மகளிர் அணியில் இருந்து மற்ற எந்த வீராங்கனைகளின் பெயரும் இந்த விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்படவில்லை. 22 ஆண்டுகளாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் மிதாலி ராஜுக்கு ஏற்கனவே அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.

Mithali 1

எனவே இந்த விருதும் அவருக்கு வழங்கப்படும் என்றே தெரிகிறது. வராலாற்றிலேயே முதல் முறையாக கடந்த ஆண்டுதான் மனிகி பாத்ரா, ரோஹித் சர்மா, விக்னேஷ் போகத், ராணி ராம்பல் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஆகிய ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. அதுபோல இந்த ஆண்டும் குறைந்தது ஐந்து வீரர்களுக்காவது இந்த விருது வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Ashwin

தமிழ் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டதில்லை. ஒருவேளை அஷ்வினுக்கு விருது கிடைத்தால், தமிழகத்திற்கு அது மிகப் பெரிய பெருமைக்குறிய விடயமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement