தோனியின் ஓய்வு குறித்து பேசிய பி.சி.சி.ஐ மூத்த அதிகாரி

Dhoni-1
- Advertisement -

உலகக்கோப்பை லீக் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. இதில் முதல் இடத்தில் இந்தியாவும் மற்ற மூன்று அணிகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

dhoni

- Advertisement -

இந்நிலையில் தனது ஓய்வு குறித்து பேட்டி ஒன்றை இந்திய அணியின் வீரரான தோனி அளித்துள்ளார். ஏபிபி செய்தி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : ஓய்வு பெறும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை. நான் ஓய்வு பெறுவதை குறித்து சிந்திப்பதும் இல்லை ஆனால் சிலர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியோடு ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.என்று தோனி ஓய்வு குறித்து முதன் முறையாக தனது மவுனத்தை கலைத்து பேசினார்.

தோனியின் இந்த பேட்டிக்கு பிறகு இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் : தோனி எப்போது ஓய்வு அறிவிப்பார் என தெரியாது. ஏனெனில் தோனி அனைத்து முடிவுகளையும் திடீர் என்றே எடுப்பார். ஏற்கனவே அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி திடீர் என்று வெளியேறினார்.

dhoni

அவர் என்ன செய்யப் போகிறார் என்று அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. அவருக்கு மட்டுமே அவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியும். அதனால் தோனியின் முடிவு ஓய்வு முடிவினை எப்போது அவர் இருப்பார் என்று எங்களுக்குத் தெரியாது. அவரது முடிவுகள் எல்லாம் திடீரென்று அதிரடியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Advertisement