ஐபிஎல் தொடர் ரத்தானால் பிசிசிஐக்கு எத்தனை கோடிகள் இழப்பு தெரியுமா – தலைசுற்ற வைக்கும் இழப்பீடு கணக்கு

Ganguly
- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு வர்த்தகம் பெருமளவில் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட பல லட்சம் கோடிகள் இதன்மூலம் இழப்பு ஏற்பட்டுள்ளது .

Ipl cup

- Advertisement -

இந்தியாவிலும் ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட கைவிடப்படும் நிலையில் உள்ளது. ஏப்ரல் 15 வரை தேதி ஒத்தி வைக்கப்பட்டு அதன் பின்னர் நிலைமையை கண்காணித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த தொடர் கைவிடப்பட்ட அதிக அளவு வாய்ப்புள்ளதால் இந்த தொடர் நடைபெறாது என்றே கூறப்படுகிறது.

மேலும் ,தற்போதைய சூழலை பார்த்தால் இன்னும் சில மாதங்களுக்கு கரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் லட்சம் மக்கள் கூடும் ஐபிஎல் தொடரை நடத்துவது கடினம் தான். இதன் காரணமாக ஜூலை அல்லது செப்டம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரை தள்ளிவைத்து வெளிநாட்டில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

williamson

அதிலும் முடியவில்லை என்றால் இன்று ஐபிஎல் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. அப்படி ஐபிஎல் தொடர் ரத்தானல் ஆனால் பிசிசிஐ கிட்டத்தட்ட 3,900 கோடி இழப்பு ஏற்படும். இந்த இழப்பை சரிகட்ட ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாம் என்று முடிவு எடுத்தாலும் கிட்டத்தட்ட ஒரு போட்டி நடத்த 500 பேராவது தேவைப்படும்.

- Advertisement -

ஆனால் மத்திய அரசு 10 பேருக்கு மேல் மைதானத்தில் இருக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் ஐபிஎல் தொடர் நடக்கிறதா இல்லையா என்று எது எவ்வாறு இருந்தாலும் இந்த தொடரின் மூலம் பல கோடிகள் இழப்பு ஏற்படும் என்பது மட்டும் உறுதி.

Kane-Williamson

ஏற்கனவே வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement